உடல் பருமனை அதிகரிக்கும் இது போன்ற உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க
உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள் ருசிக்காக கூட தொட்டுடாதீங்க தினசரி உணவு உட்கொள்ளும் போது மிகுந்த கவனம் அவசியம். அதே போன்று, நாம் டயட் வகை உணவுகள் என்று சாப்பிடக்கூடிய சில உணவுகள் மோசமான எதிர் வினையை தரக்கூடியவை. இன்றைய வாழ்க்கை முறையில் உணவு பழக்கம் என்பது மிகவும் மோசமான நிலைக்கு மாறி வருகிறது. உணவு பழக்கத்தின் மாற்றத்தால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றோம். சமச்சீர் உணவு முறை என்பது முற்றிலுமாக மாறி, கண்ட உணவுகளை சாப்பிடும் பழக்கம் பெருகி வருகிறது. நாம் உட்கொள்ளும் உணவுதான் நமது உடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாக பாதுகாக்கிறது. எனவே தினசரி உணவு உட்கொள்ளும்போது மிகுந்த கவனம் அவசியம். அதேபோன்று நாம் டயட் வகை உணவுகள் என்று சாப்பிடக்கூடிய டயட் உணவுகள் மோசமான எதிர்வினையை தரக்கூடியவை.குறிப்பாக அவை நமது உடல் பருமனை அதிகரிக்க வழி செய்கின்றன. சர்க்கரை பானங்கள்: பலர் குறைந்த அளவிலான கலோரிகள் உள்ளது என்று இந்த வகை பானங்களை குடிக்கின்றனர். ஆனால், இது ஆரோக்கியமற்ற பானங்கள் ஆகும். இது போன்ற பானங்கள் உடலில் மோசமான பாதிப்புகளை உண்டாக்கும். ...