குழந்தை பெற்றவரா நீங்கள்? இனி உங்கள் குழந்தையால் தூக்கம் இல்லை என்ற பிரச்சனை இனி இல்லை!

 குழந்தை பெற்ற தாய்மார்கள் தூக்கமின்மையை தவிர்க்கும் வழிகள்:

 

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் உணர்வுபூர்வமான, மகிழ்ச்சியான அனுபவம். அதே நேரத்தில் குழந்தை பெற்ற பெண்களின் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் தாக்கத்தை உண்டாக்கும். குறிப்பாக முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களின் இரவு தூக்கம் அதிகமாக பாதிக்கப்படும். இதனால் அவர்கள் உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள்.



 பிறந்த முதல் 4 மாதங்கள் வரை, இரவில் குழந்தைக்கு தூக்கம் சீராக இருக்காது. பசி, உடுத்தியிருக்கும் துணி ஈரமாவது போன்ற காரணங்களால் இரவில் குழந்தை அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்து அழ தொடங்கும். இந்த நிலை சீராகும் வரை தாயின் தூக்கமும் பாதிக்கப்படும். இதை தவிர்க்க சில எளிய வழிகளை கையாளலாம். அதை பற்றிய குறிப்புகள் இங்கே...

Also read:  உடல் பருமனை கட்டுப்படுத்தும் காலை நேர பழக்கங்கள் .....

தூங்கும் சூழ்நிலை:

 குழந்தை தூங்கும் அறையில் குறைவான வெளிச்சம் கொண்ட விளக்குகளை பயன்படுத்துங்கள். அந்த அறையில் எந்தவிதமான இரைச்சலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொலைபேசி ஒலிப்பது , டி.வி நிகழ்ச்சியின் சத்தம், பொருட்களை நகர்த்தும் சத்தம் ஆகியவை குழந்தையின் தூக்கத்தை கலைக்கக் கூடும். உங்கள் குழந்தைக்கு தூக்கம் வருவதற்கான அறிவுரைகளை தெரிந்து கொள்ளுங்கள். அந்த குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை தூங்க வைப்பது எளிதானது.


 

நீங்கள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது நல்லது. இதனால் உடல் அசதி குறைந்து தூக்கம் கண்களை தழுவும். 


மசாஜ் செய்யுங்கள்:


 

 குழந்தைகள் இரவில் எந்த தொந்தரவும் இன்றி அமைதியாக தூங்கும் போது, தாய்க்கும் போதுமான தூக்கம் கிடைக்கும். மாலை நேரத்தில் குழந்தைக்கு இதமான குளியலுடன், மென்மையான மசாஜ் செய்தால் அவர்கள் நன்றாக தூங்க முடியும். கை, கால்கள் முகத்தின் முக்கிய தசைகளை மெதுவாக தடவி கொடுக்க வேண்டும். குறிப்பாக கண்களுக்கு கீழ், நெற்றிப்பகுதி, கன்னத்தின் இரு புறங்கள், தாடை பகுதிகளில் மசாஜ் செய்யலாம். இது குழந்தைகளுக்கு இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கும் யுக்தி ஆகும்.

Also read: நீரழிவு என்பது நோய் அல்ல , இது ஒரு ஊட்டசத்துக்குறைபாடு

டயப்பரை மாற்றவும்:


 

குழந்தைகள் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கக்கூடும். இதுவே, அவர்களின் தூக்கம் கலைய முக்கியமான காரணமாகும். எனவே இரவில் குழந்தைக்கு உணவு தரும் முன்பு டயப்பரை மாற்ற வேண்டும். இரவில் கண் விழிக்கும் போது, டயப்பர் அதிகமாக நனைந்திருந்தால் அதை உடனே மாற்றிவிடுவது சிறந்தது.

உணவில் அக்கறை:

 குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தங்களின் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். தாய் சாப்பிடும் உணவுகளின் தாக்கம் குழந்தையிடமும் இருக்கும். எனவே, குழந்தை பிறந்த சில மாதங்கள் வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் காபி, டீ, சாக்லேட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் சாப்பிடும் உணவு எளிமையானதாக இருக்க வேண்டும். இல்லை எனில் செரிமானம் ஆவது பிரச்சனை ஏற்படுவதோடு தாய்- சேய்யின் தூக்கமும் பாதிக்கப்படும்.


 

இது தவிர தினசரி சூரிய ஒளியில் நடைபயிற்சி செய்வது, வேலைகளை வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து கொள்வது போன்றவற்றை செய்தால், உடல் மற்றும் மனநலம் மேம்படும். தூக்கம் சீராகும்.

உங்கள் காலை உணவை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் எந்த வித உணவு கட்டுப்பாடு இன்றி உங்கள் எடையை கூட்டவோ குறைக்கவோ விரும்புவோர் மற்றும் வாழ்வியல் நோய்களுக்கான தகுந்த உணவு அட்டவணை வழங்கப்படும்.

We provide services for peoples who want to make your breakfast healthy without any dietary restrictions and we provide a suitable diet plan for those who want to gain or lose weight and get rid of lifestyle diseases.

Only serious peoples, contact here.


Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)