சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?
சர்க்கரை நோயாளிகள் பாதங்களை பேணுவது ஏன் முக்கியம்!!!பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?
இந்தியாவில் இன்றைய பொழுதில் 8 கோடி நீரிழிவு நோயாளிகள் வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியாமல் சில கோடி மக்கள் இருக்கின்றனர். இந்த சர்க்கரை நோய் ஆட்கொண்ட மக்களுக்கு முக்கியமானது "கால்களில் ஏற்படும் புண்" குறித்த பிரச்சனை. இதை Diabetic foot ulcer என்கிறோம். ஏனைய பிறருக்கு வரும் பாத புண்ணுக்கும் ஒரு நீரிழிவு நோயாளிக்கு வரும் பாத புண்ணுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உரிய வித்தியாசம் உள்ளது.
காரணம்
சரியாக இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்காத ஒரு நீரிழிவு நோயாளிக்கு அவருக்கு வந்த புண் சீக்கிரம் ஆறாது, சரி புண் வந்தால் சரியாக ஆறுவது கடினம் என்று தெரியும். ஆனால் பலருக்கு தங்கள் கால்களில் புண் ஏற்பட்டதே பல நாட்கள் தெரியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.
எந்த உணவு கட்டுப்பாடுமின்றி உங்கள் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர விரும்பினால் தொடர்பு கொள்ளவும், 9942613161 (call/whatsapp) or click here
எப்படி
முற்றிய நீரிழிவு நோய் உள்ள ஒருவருக்கு தனது பாதங்களில் உள்ள நரம்பு மண்டலத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் சிறுகச்சிறு நலிந்து குறைந்து முற்றிலும் நின்றுவிடுகிறது. இதனால் அவர்களது பாதங்களில் உள்ள நரம்புகள் வலி/தொடுதல்/ வெப்பம் உணரும் தன்மையை சிறிது சிறிதாக இழக்கின்றன. முதலில் கால் லேசாக எரிச்சல் எடுக்க ஆரம்பித்து காலம் செல்ல செல்ல எரிச்சல் மரமரப்பு உணர்வாக மாறி பிறகு உணர்ச்சியற்ற நிலைக்கு சென்று விடும்.
உணர்ச்சியற்ற நிலைக்குச் சென்ற பாதங்களுக்கு உணர்ச்சி ஏற்படுத்துவது தற்போதைய மருத்துவ வளர்ச்சி கொண்டு இயலாத காரியம். இந்த நிலையை தான் Diabetic Peripheral Neuropathy என்கிறோம்.
நீரிழிவு நோயாளிக்கு வரும் பாத நரம்பு மண்டல அழற்சி இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பலர் நமது குடும்பங்களிலேயே இருப்பர். இது பெரிய சேலஞ்ச் என்னவென்றால் நமது இந்தியா போன்ற அதிக கிராமங்கள் உள்ள நாட்டில் 4 கோடி நீரிழிவு நோயாளிகள் கிராமங்களில் தான் வசிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் காலுக்கு செருப்பு கூட அணியாத பாதசரிகளாக இருக்கின்றனர்.
ஆகவே தங்களின் காதுகளில் ஆணியோ முள்ளோ தைத்தாலும் இவர்களுக்கு தெரியாது. பல நாட்கள் பார்க்காமல் இருந்துவிட்டு காதில் சீழ் வைத்து துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்தவுடனோ அல்லது தங்களை இடுப்பு பகுதியில் நெறி கட்டிய பின்னரோ அல்லது அந்த புண்ணால் ஏற்படும் குளிர் காய்ச்சல் எனும் நிலை வந்த பிறகுதான் பலருக்கும் அந்த புண் பற்றி தெரிய வரும்.
சிலரது கால்களில் இறந்த பிணங்களை தின்னும் மேகாட்ஸ் எனும் புழுக்கள் மண்டிகிடப்பதைகூட காண முடியும் இப்படி ஒரு முள்/ஆணி நமது பாதங்களை தைத்தால் பாதத்தில் ஊசி போட்டது போல கிருமி நமது தோலுக்கு கீழ் சென்று பத்திரமாக சேர்ந்து விடும் அங்கு பல்கிப்பெருகும் சீழ் வைத்து வெளியே வர பார்க்கும்.
சாதாரண புண்ணாக இருக்கும் ஒன்று முற்றிய அழுகிய நிலைக்கு செல்ல சில நாட்கள் போதும். இன்னும் அடுத்த நிலை "கேன்க்ரீன்" எனும் ரத்த ஓட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டு கால் விரலோ மொத்தமாகோ கருப்பாக மாறிவிடும்.
இந்த நிலையில் அந்த விரலையோ அல்லது கணுக்காலுக்கு கீழே நாம் காவு கொடுத்தாக வேண்டும் இல்லாவிடில் உடல் முழுவதும் அந்த கிருமி பரவி உயிரை எடுத்து விடும். நாளுக்கு நாள் அறுவை சிகிச்சை அரங்குக்கு ஒரு விரல் எடுக்க கால் எடுக்க என அனுமதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே தான் இருக்கிறது.
பாதங்களை அகற்றுவது ஏன்
பிறகு உறுப்புகளை வெட்டி எடுப்பார்கள் கடைசியாக மாத்திரையின் டோஸ் அதிகமாகி பிறகு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் டோஸ் கொடுக்க முடியாது என்றபோது இன்சுலின் திரவத்தை ஊசி வழியாக செலுத்தச் சொல்வார்கள். மாத்திரைக்கும் இன்சுலினுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மாத்திரை கணையத்திடம் சென்று கணையத்திடம் இருக்கும் இன்சுலினை எடுத்து கெட்டசர்க்கரைக்கு கொடுக்கும். இன்சுலின் என்ன செய்யும் என்றால் கணையத்திடம் போகாது கேட்காது நேரடியாக ரத்தத்தில் உள்ள கெட்ட சர்க்கரைகளுக்கு இன்சுலின் கொடுத்து விடும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மதமதப்பு, எரிச்சல்,குத்துதல், குடைதல் போன்றவை ஏற்படும் .ஆனால் நாம் உள்ளங்காலில் வலி வந்தவுடன் யோகா,மூச்சுப் பயிற்சி, தியானம், அக்குபஞ்சர், நியூரோ தெரபி, முத்ரா, ரெய்கி போன்ற மருந்தில்லா மருத்துவத்திற்கு செல்வோம்.
கால் மதமதப்பு, எரிச்சல் உள்ள நோயாளிகள் சிறிது காலத்திற்குப் பிறகு காலில் புண் தோன்றும் உடலில் எந்த இடத்தில் புண் வந்தாலும் மாறிவிடும். ஆனால் உள்ளங்காலில் வந்த புண் மட்டும் மாறாது. ஏனென்றால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே முடியாத செல்கள் புன் வந்தால் நோய் வந்தால் எப்படி தன்னை குணப்படுத்தும்? சர்க்கரை நோயை எந்த மருந்து மாத்திரையாலும் குணப்படுத்த முடியாது. சர்க்கரை நோய் என்பது நோயை கிடையாது. இதற்கு ஒரே ஒரு தீர்வு வாயில் சாப்பிடும் உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட்டை வாய் வயிறு சிறுகுடல் ஆகிய மூன்று இடங்களிலும் ஒழுங்காக ஜீரணம் செய்து தரம் வாய்ந்த வீரியம் வாய்ந்த நல்ல சர்க்கரையாக செய்து ரத்தத்தில் கலக்குவது எப்படி என்ற ஒரு சுலபமான ஒரு டெக்னிக்கை வித்தையை தெரிந்து கொள்வது மூலமாக மட்டுமே சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும்.
காலில் புண்கள் வராமல் பார்த்துக் கொள்ள சில பரிந்துரைகள்
- தினமும் உறங்கச் செல்லும் முன் கால்களை சோப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.
- நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் அமர்ந்து உங்கள் கால்களை முக்கியமாக பாதங்களை ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு நன்கு பரிசோதிக்க வேண்டும். புதிதாக ஏதேனும் பாதவெடிப்புகள்/புண்கள் முள் குத்திய தடம் ஏதும் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
- அடுத்து உங்களின் விரல்களைக் கொண்டு பாதங்களை அழுத்திப் பார்க்க வேண்டும். பல நேரமும் பல முள் குத்திய காயம் வழியே இருக்காது. ஆனால் அந்த இடத்தில் அழுத்தினால் வலி தெரியும். அப்படி வலி தெரிந்தால் உடனே அடுத்த நாள் காலை மருத்துவரை நாட வேண்டும்.
- வாரம் ஒரு முறை கட்டாயம் கால் நகங்களை வெட்ட வேண்டும். நகங்களை வெட்டும்போது தோளோடு ஒட்ட வெட்டக்கூடாது அப்படி வெட்டும்போது தெரியாமல் புண் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
- பித்த வெடிப்புகள் இருந்தால் தேங்காய் எண்ணெய்/நீரிழிவு நோயாளிகள் பாதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய Moisturizer தடவலாம். கால் பாதங்கள் வரவரவென்று இருப்பதை தவிர்க்க வேண்டும்.
- கால் விரல்களுக்கு இடுக்கில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக துடைத்து விட வேண்டும். கால்கள் தண்ணீரில் எப்போதும் படுமாறு வேலை செய்பவர்களுக்கு சோற்றுப்புண் எனும் பூஞ்சை தொற்று ஏற்படலாம் ஆகவே அவர்கள் தினமும் கால் விரல்களுக்கு இடுக்கில் உள்ள இடங்களில் சோற்றுப்புண்(Athletes foot) இருக்கிறதா என்று பார்த்து இருந்தால் அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும்.
- பொதுவாக நீரிழிவு நோயாளிகள் அனைவரும் ஐம்பது வயதில் தாண்டியவர்களாக இருப்பதால் கிட்ட பார்வை சரியாக இல்லாமல் இருக்கலாம். ஆகவே அதற்குரிய லென்ஸ் கொண்டு பாதங்களை பார்க்கலாம்.
- கால் பாதங்களில் புண் ஏற்பட்டால் போர்க்கால நடவடிக்கையில் சிகிச்சை எடுக்க வேண்டும். காலில் புண்ணோடு நடப்பது தவறு .
- நீரிழிவு நோயாளிகள் வெளியே எங்கு சென்றாலும் கட்டாயம் செருப்பு அணியாமல் செல்லக்கூடாது.
முக்கியமான பரிந்துரை
நீரிழிவை கட்டுக்குள் வைக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவுகளை வீட்டிலேயே Glucometer கொண்டு சோதித்து பார்க்க வேண்டும்.ரத்த சர்க்கரை அளவுகளை சரியாக பராமரித்தால் இந்த நியூரோபதி வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். மருத்துவரிடம் சரியாக காண்பித்து சர்க்கரை கட்டுக்குள் வைக்க வேண்டும் அதற்குரிய மருந்துகளை சரியாக எடுக்க வேண்டும் முகத்தை அழகாக தினமும் கண்ணாடியை பார்த்து பராமரிப்பதை விட பல மடங்கு கவனமாக நமது பாதங்களை பராமரிக்க வேண்டும்.
Get in touch if you want to control your diabetes without any diet restrictions, call/whatsappp 9942613161 or click here







Comments
Post a Comment