நல்ல தூங்குனா அழகு அதிகரிக்குமா!
குறைவான தூக்கம், பசியைத் தூண்டும் 'கிரெலின்' எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடுவோம். இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல்,கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும்.
உடல் வளர்ச்சிக்கும், சீரான செயல்பாட்டுக்கும் முக்கியமானது தூக்கம். இதற்கும், அழகுக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. எந்தவித சலனமும் இல்லாத ஆழ்ந்த உறக்கம் கொள்ளும்போது, உடலில் வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும். இதன் மூலம் புதிய செல்கள் உருவாகும். பல்வேறு காரணங்களால் சருமத்தில் ஏற்படும் சேதங்கள் நீங்கி, பொலிவு உண்டாகும். உடல் உறுப்புகள் அனைத்தும் புத்துணர்வு அடையும். முதுமைக்கான அறிகுறிகள் குறைந்து இளமை அதிகரிக்கும். இத்தகைய முழுமையான தூக்கத்தையும் 'பியூட்டி ஸ்லீப்' என்று குறிப்பிடுகிறார்கள்.
மருத்துவ ஆய்வுகளின்படி, ஒரு நாளுக்கு ஏழு முதல் ஒன்பது மணி நேர தூக்கம் அவசியமானது. ஆறு மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்கினால் ஆரோக்கிய சீர்கேடு உண்டாகி முதுமைக்கான அறிகுறிகள் விரைவாகத் தோன்றும். இரவில் போதுமான நேரம் தூங்காமல் அடுத்த நாள் காலையில் கண்விழிக்கும்போது, உங்கள் சருமமும், உடலும் சோர்வடைந்து புத்துணர்வு இன்றி காணப்படுவதை உணர முடியும்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவது, அதிக உப்பு, காரம் உள்ள உணவைத் தவிர்ப்பது, படுக்கை அறையில் இதமான சூழலை ஏற்படுத்துவது ஆகியவை ஆழ்ந்த தூக்கம் பெறுவதற்கான வழிகள் ஆகும்.
Also Read: உடல் பருமனை கட்டுப்படுத்தும் காலை நேர பழக்கங்கள்
நன்மைகள்:
சருமத்தை மேம்படுத்தும்:
பகலில் ஏற்படும் சுற்றுச்சூழல் சார்ந்த அழுத்தங்கள் காரணமாக சருமம் பாதிப்படையும். இதிலிருந்து குணமடைவதற்கு போதுமான தூக்கம் அவசியம். தூக்கத்தின்போது வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிப்பதால் புதிய சரும செல்கள் உருவாகும். சருமத்துக்கு தேவையான ரத்த ஓட்டம் கிடைப்பதால் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் நீங்கும்.
கண் வீக்கத்தைக் குறைக்கும்:
இரவில் போதுமான நேரம் தூங்கவில்லை என்றால், கண்களுக்குக் கீழ் கருவளையம் ஏற்படும். சில சமயங்களில் கண்கள் வீங்கியது போல் தோற்றமளிக்கும். அவற்றை மறைக்க மேக்கப் உதவினாலும், அது தற்காலிகமான தீர்வாகவே இருக்கும். இயற்கையான முறையில் அதை நீக்க விரும்பினால், இரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
உடல் எடையை கட்டுப்படுத்தும்:
குறைவான தூக்கம், பசியை தூண்டும் 'கிரெலின்' எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடுவோம். இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல், கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும். ஆனால், சீரான தூக்கம் வளர்ச்சி மாற்றத்தை அதிகரிக்கும். கொழுப்பை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
Also read: நீரழிவு என்பது நோய் அல்ல , இது ஒரு ஊட்டசத்துக்குறைபாடு
முகப்பருக்களை நீக்கும்:
தூக்கமின்மை மன அழுத்தத்தை உண்டாக்கும். இதனால் உடலில் ஹார்மோன்கள் சீரற்று சுரக்கும். இதன் விளைவாக முகப்பருக்கள் மற்றும் சரும பாதிப்புகள் ஏற்படும். 8 மணி நேரம் ஆழ்ந்து உறங்கும் போது இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாது. சரும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கொரோனாவுக்கு பிறகு தூக்கப் பிரச்சனைகள்:
கொரோனா காலகட்டத்தில் மக்கள் வாழ்க்கை முறை நிறைய மாறிவிட்டது. அவர்கள் நோய்வாய்ப்பட்டால் திடீரென்று தனிமையில் இருக்க வேண்டியுள்ளது.சில சமயங்களில் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கும். சமூக ஊடகங்களின் மீதான சார்பு அதிகரித்து வருகிறது என்று சென்னையில் உள்ள மனநல சுகாதார கழகத்தின் இயக்குனர் டாக்டர் பூர்ணா சந்திரிகா கூறுகிறார்.
மக்கள் பல்வேறு வகையான நிச்சயமற்ற தன்மைகளுடன் போராடுகிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் வீட்டில் தங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களின் தினசரி பழக்க வழக்கம் மாறிவிட்டது. இவை அனைத்தும் மக்களின் தூக்கம் மற்றும் தூக்க சுழற்சியை பாதிக்கின்றன. எனவே இந்த பிரச்சனை இப்போது பொதுவாக காணப்படுகிறது. தூக்கமின்மை ஒரு நோயாக இருக்கலாம் அல்லது மற்றொரு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் இத்தகைய பிரச்சனைகள் அதிகம் காணப்படுகின்றன. இவர்களின் மருத்துவர்களும் அடங்குவர்.
நல்ல தூக்கத்திற்கு பின்வரும் உதவி குறிப்புகளை கடைபிடிப்போம்:
- தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் டீ-காபி குடிக்க வேண்டாம்.
- அதிக உணவை உண்ண வேண்டாம்.
- தூங்குவதற்கு முன் கண்டிப்பாக புகை பிடிக்காதீர்கள்.
- தூங்குவதற்கு ஒரு இடத்தையும், படுக்கையையும் தயார்செய்துவைக்கவும். அங்கே சாப்பிடுவது, படிப்பது, விளையாடுவது போன்ற வேலைகளை செய்யாதீர்கள்.
- நீங்கள் பகலில் ஒரு குட்டி தூக்கம் போட விரும்பினால், அதை உங்கள் படுக்கையில் செய்ய வேண்டாம்.
- படுக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் "ஸ்கிரீன் டைம்" (டிவி கணினி) வைத்துக் கொள்ளாதீர்கள்.
- மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருந்தால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.
- உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தம் இருந்தால், மருந்துகளை சரியான நேரத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.
- அன்றாட வேலையில் ஒரு நிலையான வணக்கத்தை பின்பற்றுங்கள். அதில் தூக்கம், எழுதல், உடற்பயிற்சி நேரம் எல்லாமே நிர்ணயிக்கப்பட்டு இருக்க வேண்டும் .
இந்த முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் பிரச்சினையை பெருமளவு சமாளிக்க முடியும்.
Related tags: Sleep, Healthy lifestyle, Positive thinking, Stress, Weight loss without missing our favorite foods










Comments
Post a Comment