உடல் பருமனை அதிகரிக்கும் இது போன்ற உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க

 உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள் 

ருசிக்காக கூட தொட்டுடாதீங்க

 தினசரி உணவு உட்கொள்ளும் போது மிகுந்த கவனம் அவசியம். அதே போன்று, நாம் டயட் வகை உணவுகள் என்று சாப்பிடக்கூடிய சில உணவுகள் மோசமான எதிர் வினையை தரக்கூடியவை.


 


 இன்றைய வாழ்க்கை முறையில் உணவு பழக்கம் என்பது மிகவும் மோசமான நிலைக்கு மாறி வருகிறது. உணவு பழக்கத்தின் மாற்றத்தால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றோம். சமச்சீர் உணவு முறை என்பது முற்றிலுமாக மாறி, கண்ட உணவுகளை சாப்பிடும் பழக்கம் பெருகி வருகிறது. நாம் உட்கொள்ளும் உணவுதான் நமது உடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாக பாதுகாக்கிறது. எனவே தினசரி உணவு உட்கொள்ளும்போது மிகுந்த கவனம் அவசியம். அதேபோன்று நாம் டயட் வகை உணவுகள் என்று சாப்பிடக்கூடிய டயட் உணவுகள் மோசமான எதிர்வினையை தரக்கூடியவை.குறிப்பாக அவை நமது உடல் பருமனை அதிகரிக்க வழி செய்கின்றன.


 


 சர்க்கரை பானங்கள்:

 பலர் குறைந்த அளவிலான கலோரிகள் உள்ளது என்று இந்த வகை பானங்களை குடிக்கின்றனர். ஆனால், இது ஆரோக்கியமற்ற பானங்கள் ஆகும். இது போன்ற பானங்கள் உடலில் மோசமான பாதிப்புகளை உண்டாக்கும். 


 

குறிப்பாக இவற்றில் அதிக சர்க்கரை உள்ளதால் உடல் பருமனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறைந்த கலோரிகள் என்று நினைத்துக் கொண்டு இவற்றை பருகுவது காலப்போக்கில் நாள்பட்ட நோய்களின் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் சோர்வாக உணர்ந்தால் தண்ணீர் அல்லது பழச்சாறுகளை அருந்துவது நல்லது.


செரியல்ஸ் :

சமச்சீர் காலை உணவின் ஒரு பகுதியாக செரியல்ஸ் விளம்பரப்படுத்தப்பட்டாலும், இவை உடலுக்கு ஆரோக்கியமானவை அல்ல. 


 

ஏனெனில், இவற்றில் அதிக அளவு சுத்த சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், இந்த தானியங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க காரணமாகின்றன. எனவே, இதற்கு பதிலாக குறைந்த அளவு குளுக்கோஸ் கொண்ட முழு தானிய உணவுகளை தேர்வு செய்வது நல்லது. மேலும், இவற்றுடன் உலர் பழங்கள், நட்ஸ் வகைகளை சேர்த்து சாப்பிடுவது சிறந்த உணவாக இருக்கும்.


பதப்படுத்தப்பட்ட ஸ்னாக்ஸ்:

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளான சிப்ஸ், பப்ஸ் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிட்டு வருகின்றனர். இதை தொடர் பழக்கமாகவும் வைத்துள்ளனர்.


 

 ஆனால், இந்த ஜங்க் வகை உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சோடியம் மற்றும் செயற்கை சேர்க்கைகள் உள்ளதால் உடலுக்கு தீங்கு ஏற்படுத்த கூடும். மேலும், ஸ்னாக்ஸ் வகைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை.


 

WEIGHT LOSS without missing our favourite foods, click here

Some healthy weight loss results with proper support system are,

 

 

 
கிரனோலா பார்கள்:

புரதம் நிறைந்த கிரனோலா ஸ்னாக்ஸ் வகைகள் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். இவற்றில் புரதம் இருக்கிறது என்பதற்காகவே பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். 


 

ஆனால், இதில் மிகக குறைந்த அளவிலேயே புரதம் உள்ளது. வியாபார யுத்திக்காக மட்டுமே இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றில் பெரும்பாலும் சர்க்கரைகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிரம்பியுள்ளன. எனவே, இவற்றிற்கு பதிலாக முழு தானியங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை சேர்த்து ஸ்னாக்ஸ் போன்று வீட்டிலேயே தயாரித்து சாப்பிடலாம்.


டயட் சோடாக்கள்:

டயர் சோடாக்கள் வழக்கமான சோடாக்களுக்கு பதிலாக கலோரி இல்லாத சோடாவாக விற்பனை செய்யப்படுகின்றன. 


 

ஆனால், இந்த பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்புகள் உடலின் இயற்கையான பசியின் அறிகுறிகளை சீர்குலைத்து, அதிக பசி மற்றும் அதிகப்படியான உணவுகளை உட்கொள்ள தூண்டுகிறது. இதற்கு பதிலாக பழச்சாறுகளை தயாரித்து குடிக்கலாம்.


 டயட் உணவுகள்:

 உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பலரும் தவறான உணவு பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இது போன்று ஆதாரமற்ற டயட் முறைக்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள் போன்ற பல்வேறு முழு உணவுகளை சாப்பிட்டு வரலாம். இவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடல் எடை குறைப்புக்கு உதவும். மேலும் தினமும் போதுமான தண்ணீர் குடிப்பதும் அவசியம்.



WHO அட்வைஸ் படி 20 கிலோவிற்கு ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். எடுத்துக்காட்டாக நான் 60 கிலோ இருக்கிறேன் என்றால் என்னுடைய உடல் எடைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் ஆகும்.


 

ஆரோக்கியமான உணவுக்கும் எப்போதாவது ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளவதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.இது உங்கள் எடை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். 


Related tags: Weight loss, Exercise, Fitness

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)