ஈஸ்ட்ரோஜென் குறைப்பாட்டினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும்/பிரச்சனைகளும்
பெண்களை பாதிக்கும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு
பெண் இனப்பெருக்க அமைப்பின் பராமரிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவக்கூடிய ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன். இது கருத்தடை மருந்துகள் உற்பத்தியிலும், மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற ஹார்மோன் உணர்திறன் புற்று நோய்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.
மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதைத் தவி, இனப்பெருக்க மற்றும் சிறுநீர் பாதையின் ஆரோக்கியம், இதயத்தின் செயல்பாடுகள், எலும்புகளின் உறுதி, இரண்டாம் நிலை பாலியல் பண்புகள், தோல் மற்றும் முடியின் தன்மை ஆகியவற்றுக்கும் ஈஸ்ட்ரோஜன் அடிப்படையாக இருக்கிறது.
ஈஸ்ட்ரோஜன் குறைபாடுக்கான காரணங்கள்:
Also read: குழந்தை பெற்றவரா நீங்கள்? இனி உங்கள் குழந்தையால் தூக்கம் இல்லை என்ற பிரச்சனை இனி இல்லை!
பெண்களுக்கு, மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது இயற்கையானது. ஆனால், மெனோபாஸுடன் தொடர்பில்லாத சில குறிப்பிட்ட காரணங்களாலும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையலாம். இது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
- மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்.
- பசியின்மை மற்றும் போதுமான உணவு சாப்பிடாததால் ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்க தேவையான ஊட்டச்சத்துக்களை உடல் இழக்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும்.
- டர்னர் சிண்ட்ரோம் மற்றும் பிராகில் எக்ஸ் சிண்ட்ரோம் போன்ற மரபணு பிரச்சனைகளாலும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு ஏற்படும்.
- ஆட்டோ இம்யூன் நோயினால் கருப்பை பாதிக்கப்படும்போதும் இயல்பாகவே ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறையும். இதுவே முதன்மை கருப்பை பற்றாக்குறை அல்லது முன்கூட்டிய மெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது.
- கருப்பையை பாதிக்கக்கூடிய சிகிச்சைகளான கதிர்வீச்சு, கீமோதெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சைகளும் ஈஸ்ட்ரோஜனின் இயல்பான சுரப்பை தடுக்கும்.
- அதிகப்படியாக உடற்பயிற்சி செய்வதாலும், போதுமான ஊட்டச்சத்து உடலுக்கு கிடைக்காததாலும் ஹைபோதாலமிக் அமினோரியா என்ற பிரச்சினை ஏற்படும். இதனால் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி செய்ய உதவும் ஹார்மோனை மூளை போதுமான அளவு வெளியிடாது. இதன் காரணமாகவும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு ஏற்படலாம்.
அறிகுறிகள்:
உலர்ந்த சருமம், மென்மையான மார்பகங்கள், பலவீனமான எலும்புகள், இரவு நேரத்தில் அதிகமாக வியர்ப்பது, உடல் எடை அதிகரிப்பது, தூக்கமின்மை மற்றும் சீரற்ற தூக்கம்,கவனம் செலுத்துவது சிரமம், எப்போதும் எரிச்சலான மனநிலை போன்றவை ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டுக்கான அறிகுறிகள் ஆகும்.
Also read: சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா?
ஈஸ்ட்ரோஜன் சுரப்பை சீராக்கும் வழிகள்:
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது, தினமும் மிதமான உடற்பயிற்சிகள் செய்வது, சத்தான மற்றும் சரிவிகித உணவு முறையை பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்த முடியும்.
ஈஸ்ட்ரோஜின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்:
ஆளி விதை, எள், சோயா பீன்ஸ், சோயா பால், சோயா தயிர், டோபு, ஸ்ட்ராபெர்ரி, பீன்ஸ் வகைகள், பிஸ்தா, வால்நட், வேர்கடலை, உலர் பழங்கள், பூண்டு, முழுதானியங்கள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்கும்.
பெண்கள் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தகுந்த ஆலோசனை பெற, தொடர்பு கொள்ளவும் இங்கே.
Women's related problems are all can be controlled by proper guidance, contact here for further counseling.








Comments
Post a Comment