கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க நாம் அன்றாடம் சமைக்கும் சமையல் பொருட்களே போதுமா?!! இது தெரியாம போச்சே!!!
கெட்ட கொழுப்பை கரைச்சு வெளியேற்றி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க இதை செய்யுங்க...
இந்தியாவில் நீரழிவை தொடர்ந்து அச்சுறுத்தக்கூடிய பிரச்சினையாக இருப்பது இதய நோய்கள்தான். இந்த இதய நோய்களும் அதற்கான காரணிகளில் ஒன்றான உடல் பருமனுக்கும் மிக முக்கியமான காரணமாக இருப்பது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை தான். இந்த கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு நம்முடைய உணவு முறைகளிலேயே வழிகள் உண்டு. நாம் நம்முடைய உணவுத்தட்டில் ஓரமாக ஒதுக்கி வைக்கும் சில உணவுகள் நம்முடைய கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அப்படி கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் சில உணவுகள் பற்றி இங்கே பார்ப்போம்.
உயர் கொலஸ்டிரால் பிரச்சனை என்பது நம்முடைய உடலில் நல்ல கொலஸ்டிராலான HDL கொலஸ்ட்ரால் குறைந்து கெட்ட கொலஸ்டிராலான LDL கொலஸ்ட்ரால் மற்றும் கிளிசரைடுகள் அதிகரிப்பதன் காரணமாக உண்டாவது. இதை வந்தபின் விளைவுகளை தடுக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதை காட்டிலும் நம்முடைய உணவு முறையாலும் வாழ்க்கை முறை மாற்றங்களாலும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது தான் நல்லது.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பூண்டு
உடலில் ஒட்டுமொத்த கொலஸ்ட்ராலின் அளவையும் குறைப்பதோடு ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலான LDL கொலஸ்ட்ராலை குறைப்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் அதிக அளவு ஆன்ட்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரும் உதவியாக இருக்கும்.
உங்கள் உணவை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் கெட்ட கொழுப்பை குறைக்க விருப்பமா?
தொடர்பு கொள்ளவும்
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் மஞ்சள்
இந்திய சமையலறைகளில் மிக முக்கியமான இடம் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சளில் உள்ள குர்குமின் உடலில் மிக முக்கியமான பிரச்சனைகளை தீர்க்க உதவி செய்கிறது. குறிப்பாக புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கவும் வளர விடாமல் தடுக்கவும் உதவி செய்யும்.
மிக முக்கியமான ரத்தத்தில் உள்ள LDL கொலஸ்ட்ரால் மற்றும் டிரை கிளிசரைடுகளை குறைக்க செய்யும்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் இலவங்கப்பட்டை
லவங்கப்பட்டையில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்டுகள் இருக்கின்றது. இது நோய் தொற்றுகளைத் தடுக்கும் அதோடு டைப்-2 நீரிழிவை கட்டுப்படுத்த உதவும்.
ரத்தத்தில் உள்ள டிரை கிளிசரைகள் மற்றும் எல்டிஎல் கொலஸ்ட்ராலை குறைப்பதில் மிகப்பெரிய அற்புதத்தை உடலில் செய்யக் கூடியது லவங்கப்பட்டை என்று சொல்லலாம்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வெந்தயம்
வெந்தயம் அதிக அளவு நார்ச்சத்துகளும் இரும்புச்சத்தும் கொண்டது. வெந்தயம் என்றாலே அது ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவி செய்யும் என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.
ரத்தத்தில் மட்டும் இன்றி உடல் உள்ளுறுப்புகளிலும் தேங்கும் கொலஸ்ட்ராலை குறைக்கச் செய்யும். LDL கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துவதில் வெந்தயம் மிக சிறந்த பலன்களை கொடுக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் இஞ்சி
இஞ்சியில் ஆன்டி பாக்டீரியல், ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இதை பருவ காலம் நோய் தொற்றுகள் முதல் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற கூடியது.
இஞ்சி உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களை தவிர்க்க உதவும்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் கொத்தமல்லி விதை
கொத்தமல்லி விதை சுவாச மண்டலங்களில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்ய உதவி செய்யும் என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் கொத்தமல்லி விதை ரத்தத்தில் உள்ள டிரை கிளிசரைடுகளின் அளவையும் LDL கொலஸ்ட்ராலையும் குறைக்கச் செய்யும். அதோடு இதில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன.
Also Read: உடல் பருமனை கட்டுப்படுத்தும் காலை நேர பழக்கங்கள் .....
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் துளசி
துளசி புனிதமான தாவரம் மட்டுமல்ல, நிறைய மருத்துவ குணங்கள் கொண்ட தாவரமும் கூட. இது தொண்டை மற்றும் அழற்சி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி சரும பிரச்சனைகளையும் தீர்க்க உதவி செய்யும்.
இதே துளசி கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க செய்யும். குறிப்பாக ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க துளசி உதவும்.








Comments
Post a Comment