மாம்பழம் சாப்பிடுறது உங்களுக்கு விருப்பமா? அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க ...!
மாம்பழம் உண்பதற்கு சரியான நேரம் ...!! நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து வருவதன் காரணமாக உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளையும், நீர்சத்து மிக்க உணவுப் பொருட்களை உட்கொள்வது உடலில் எலெக்ட்ரோலைட் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும்,வெப்பத்தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவும் .கோடை காலத்தில் பலரும் செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். தர்பூசணி , முலாம்பழம் , மாம்பழம் ,போன்ற பருவ கால பழங்களை உட்கொள்வது செரிமானத்திற்கு உதவும்.நீரிழப்பை தடுக்கும். மாம்பழம் சாப்பிட சரியான நேரம் : - கோடை காலத்தில் பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.அதனை சரியான நேரத்தில் , சரியான அளவில் சாப்பிடுவது முக்கியம் . இல்லாவிட்டால் உடல் உபாதை பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும். மதிய உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். இதுகுறித்து உணவியல் நிபுணர் " மன்பிரீத் கலர் , "நாம் உண்ணும் உணவு சிக்கலின்றி செரிமானத்திற்கு உள்ளாக வேண்டும்.க...