ஆபத்தான 5 வெள்ளை உணவுகள் !!!!!!!!!!
ஆபத்தான 5 வெள்ளை உணவுகள் !!!
உப்பு :-
உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொண்டால் அது இதய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.பதப்படுத்தப்பட்டு பாக்கெட்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளில்,அவை கெட்டு போகாமல் இருப்பதற்காக அதிக அளவில் உப்பு கலந்திருக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக இதய நோய்,ரத்த அழுத்தம் உள்பட நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
பால் :-
பால் சாது நிறைந்தது.பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டது.உடல் உறுப்புகளுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது.ஆனாலும் அதனை அளவோடு உட்கொள்வது அவசியமானது.சிலருக்கு பால் ஒவ்வாமை பிரச்னை ஏற்படக்கூடும்.
அப்படிப்பட்டவர்கள் பாலை தவிர்ப்பது சிறந்தது.அதற்கு பதிலாக சோயா பால்,பாதாம் பால் பருகலாம்.காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
வெள்ளை சர்க்கரை :-
வெள்ளை சர்க்கரையை அதிகம் சேர்த்துக் கொள்வது பல் சொத்தையை ஏற்படுத்தும்.மனச் சோர்வையும் உண்டாக்கும்.அதன் பயன்பாடு அதிகரிப்பது நீரழிவு நோய்க்கு அடித்தளமிடலாம்.இந்தியாவில் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது .எனவே வெள்ளை சர்க்கரையை கூடுமான வரை தவிர்ப்பது நலம்.
வெள்ளை அரிசி :-
அரிசி ஆரோக்யமானதுதான்.ஆனால் அது தீட்டப்பட்டு பளிச் வெள்ளை நிறத்தில் புழக்கத்தில் இருக்கிறது.நம் முன்னோர்கள் காய் குத்தல் அரிசியை பயன்படுத்தினர்.அரிசியின் தேவை அதிகரிப்பு காரணமாக இயந்திரங்கள் மூலம் பாலிஷ் செய்யப்பட்டு மற்றும் ரசாயனம் ,பூச்சி கொல்லி மருந்துகள் ,செயற்கை உரம் கொடுக்கப்பட்டு நெற் கதிராக இருக்கும் பொழுதே அதன் தன்மை முழுவதும் வணிக நோக்கத்திற்காக மாற்றம் செய்யப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.இதனை அதிக அளவு உணவாக உட்கொள்ளும் பொது உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.
இதற்கு மாற்றாக பழுப்பு அரிசி எனப்படும் கைகுத்தல் அரிசி உபோயகிப்பதுதான் சிறந்தது.இந்த அரிசியின் தோல் வெகு குறைவாகவே நீக்கம் செய்யப்பட்டிருக்கும்.அதனால் மிதமான பழுப்பு நிறத்தில் காணப்படும். வெகுவாக கூர் தீட்டப்பட்டு பாலிஷ் செய்யப்படாததால் மிழுந்த சத்து உள்ளதாக இருக்கும்.
மைதா மாவு :-
பாஸ்தாவில் தொடங்கி நாம் உண்ணும் மைதா மாவு வரை சிற்றுண்டி உணவுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வெள்ளை நிறத்தில் உள்ள மாவை அதிகம் உணவாக எடுத்து கொள்வது மிகுந்த உடல் நல குறைபாட்டை உருவாக்கும் .இது உடல் உறுப்புகளை சோர்வடைய செய்யும்.ஏனெனில் இது கோதுமைமாவின் கடைசி பகுதியில் கழிவாக வெளியேற்றம் செய்யப்படும் ஒரு பொருளாகும்.மேலும் இது கடைசியாக கிடைக்கும் பொழுது இதன் சத்துக்கள் அனைத்தும் சிதைந்து ,ஒரு தேவையற்ற பொருளாக கிடைக்கின்றது.இதையே இன்று சந்தைகளில் வணிக நோக்கத்திற்காக சில வேதிப்பொருட்களை சேர்த்து கடை உணவுகள் மிகவும் மிருதுவாக மாறுவதற்கு சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு மாற்றாக கோதுமைமாவை பயன்படுத்தலாம்.










Comments
Post a Comment