சர்க்கரை நோய் என்றால் என்ன
சர்க்கரை நோய் என்றால் என்ன? நமது உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையைக் கொழுப்பாகவும், கிளைகோ ஜென்னாகவும் சேமித்து வைக்க உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவின் அளவுக்குத் தக்கவாறு இன்சுலின் தானாகவே சுரந்து இந்தப் பணியைச் செய்கிறது. பல காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சர்க்கரையானது சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்ததில் நேரடியாக கலந்து விடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. அது 180 மில்லிகிராம் சதவீதத்தைத் தாண்டும் போது சிறுநீரிலும் சர்க்கரை வெளியாகிறது. இதுதான் சர்க்கரை நோய். காரணங்கள்:- 1.அதிக எடை ( Over Weight / Obesity ) 2.அதிக கொழுப்பு ( High Fat / Cholestrol ) 3. இருதய நோய் ( Cardio Vascular Disease) 4 .இரத்த கொதிப்பு ( High BP) 5. குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பவர்கள் ( Genetically 6.உடல் உழைப்பு, உடற்பயிற்சி இன்மை ( Lack of work / Exercise ) 7.கவலை...