சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)
சிசேரியன் கீறல் வலியை போக்க மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து) அறுவை சிகிச்சைக்கு பிறகு சிசேரியன் செய்த இடத்தில் வலியை உணர்கிறீர்களா!!! குழந்தையை பெற்றெடுப்பது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், கர்ப்ப காலம் முதல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது வரை பெண்கள் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். கர்ப்ப காலத்தில் பலவிதமான மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றன. ஒரு சில மாற்றங்கள் பிரசவத்திற்கு பிறகும் தொடர்கின்றன. சுகப்பிரசவம் அல்லது சிசேரியன், எதுவாக இருந்தாலும் குழந்தையை பெற்றெடுத்தபின் பல உடல் நல மாற்றங்களையும், வலிகளையும் அவர்கள் சந்திக்கின்றனர். சுகப்பிரசவத்தை விட சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு மீட்பு நேரம் அதிகமாக தேவைப்படும். ஏனெனில் இந்த பெரிய அறுவை சிகிச்சையில் குழந்தையை வெளியே எடுக்க வயிற்றின் ஏழு அடுக்குகள் வரை கிழிக்கப்படுகிறது. மற்ற அறுவை சிகிச்சையைப் போலவே இதுவும் குணமடைவதற்கு நேரம் எடுக்கும். கீறல் நான்கு முதல் ஆறு அங்குலம் வரை ஆழமாக இருப்பதால் அவை முழுமையாக ஆற சில மாதங்கள் வரை ஆகலாம் . இந்நிலையில் சிசேரியன் செய்த இடத்தில் வலியை பெரும்பாலான தாய்மா...