எண்ணற்ற நோய்களை தடுக்கும் நடைப்பயிற்சி
எண்ணற்ற நோய்களை தடுக்கும் நடைப்பயிற்சி தினமும் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பது நமக்கு நிறைய பலன்களை தரும். எனினும் இவ்வளவு தொலைவுக்கு நடக்க முடியாதவர்கள் முடிந்தவரை குறிப்பிட்ட தூரத்திற்கு நடக்கலாம். ஆரோக்கிய வாழ்வுக்கு சீரான உணவுப் பழக்கமும் உடற்பயிற்சியும் அவசியம் என்று கேள்விப்பட்டிருப்போம். இருக்கின்ற உடற்பயிற்சிகளிலேயே எளிமையானது எல்லோரும் செய்யத் தகுந்தது நடைபயிற்சி தான். இதன் மூலம் நமக்கு நீண்டகால நன்மைகள் கிடைப்பதாக எண்ணற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதய நலன் காப்பது, உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு என்று நாம் ஆரோக்கியத்தை தக்க வைக்க நடைபயிற்சி நல்லதொரு பழக்கமாக அமையும். நாளொன்றுக்கு எவ்வளவு தூரம் நடக்கலாம், அதன் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து இப்போது விரிவாக பார்க்கலாம். நாளொன்றுக்கு 10,000 அடிகள்.. தினசரி 10,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பது நமக்கு நிறைய பலன்களைத் தரும். எனினும் இவ்வளவு தொலைவுக்கு நடக்க முடியாதவர்கள் முடிந்தவரை குறிப்பிட்ட தூரத்திற்கு நடக்கலாம். கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தினசரி 8,200 அடியெடுத்து நடப்பதன் மூலம...