மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம் போடுவதனால் வரும் நன்மை என்ன? ஆபத்துகள் என்ன?
மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம் போடுவதனால் வரும் நன்மை என்ன? ஆபத்துகள் என்ன?
அலுவலகத்தில், நாம் சற்று நேரம் கண் அயரும் போது, அதை நமது உயர் அதிகாரி பார்த்து விட்டால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து நமக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன் அவர்களின் கருத்துப்படி, இரவில் மட்டுமே தூங்க வேண்டும் என்பது இல்லை. இது நமது வாழ்க்கை முறைக்கு உகந்ததும் அல்ல. மனிதன் போன்ற பாலூட்டி விலங்குகளில், உறக்கம் மேற்கொள்ளும் முறைகளில் பெரிய வேறுபாடுகளே நிலவி வருகின்றன.
பகல் தூக்கம்
குழந்தைகள் மற்றும் வயதானவர்கள், பகல் நேரங்களில் சிறிது நேரம் உறக்கம் மேற்கொள்வது மிக சாதாரணமான நிகழ்வே ஆகும். வேலை பார்க்கும் இளைய தலைமுறையினரும் இந்த நடைமுறையை பின்பற்றினால் அதிக நன்மைகள் விலையும் என்பது நிபுணர்களின் கருத்துக்களாக உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில், மக்களின் உரக்க நேரம் என்பது மிகவும் குறைவான அளவில் உள்ளது. மதிய உணவுக்குப் பிறகு அரை மணி நேர உறக்கம் மேற்கொள்வதால், அது நம்மிடையே விழிப்புணர்வை அதிகரிக்க உதவுகின்றன.
நாம் மிகவும் சோர்வாக இருக்கும் போது, நம்மையே அறியாமல், பல்வேறு தவறுகளை செய்யும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. வாகனம் ஓட்டும்போது எதிரே வரும் காருடன் மோதுதல், எழுதும் போதும், பல்வேறு தவறுகள் ஏற்பட காரணமாக அமைகின்றன. 40 நிமிட கால அளவிலான குட்டித் தூக்கம், செயல்பாடுகளில் 34 சதவீத அளவிற்கு அதிகரிப்பதாக நாசா மேற்கொண்ட ஆயுள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விழிப்புணர்வாக இருக்க உதவுவதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட தொலைவுக்கு வாகனம் இயக்க வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள், போதிய அளவிற்கு உறங்கினால் மட்டுமே, விபத்துக்கள் ஏற்படுவதில் இருந்து தடுக்க முடியும். சாலைகளில் வாகனம் இயக்குபவர்கள், அசதியாக உணர்ந்தால், உடனடியாக வாகனத்தை நிறுத்தி, சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகே மீண்டும் வாகனத்தை இயக்க வேண்டும். சிறிது நேரம் உறக்கம் மற்றும் ஓய்வு, சிறிய அளவு காபி நம்மை சோர்வில் இருந்து காக்க உதவும்.
மதியம் தூங்கினால் உடல் எடை கூடுமா
இரவு நேர உறக்கத்திற்கு
குட்டி தூக்கம் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்றாக இருப்பதில்லை. இதில் சிலருக்கு இரவு நேர உறக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி விடுகிறது. பகல் நேரங்களில், அலுவலகத்திலோ அல்லது படுக்கையிலோ சிறிது நேரம், உறங்கினால், அது இரவில் சரியான உறக்கமின்மைக்கு வழிவகுப்பதோடு இன்சோம்னியா என்ற குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக, அடுத்த நாளில் அது சோர்வுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
குட்டி தூக்கத்தின் நேரம், கால அளவை பொறுத்து, அது நம்மில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளையும் நாம் குறைத்துக் கொள்ளலாம். குட்டி தூக்கத்தை மதியம் 2 முதல் 3 மணிக்கு உள்ளாக 10 முதல் 30 நிமிடங்கள் கால அளவு கொண்டதாக இருக்க வேண்டும். மதிய உணவு சாப்பிட்ட பிறகு குட்டி தூக்கம் போடுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது
மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுவது, குறிப்பாக இளைய தலைமுறைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது. குட்டி தூக்கம் போடுபவர்கள், இந்த முறையை மேற்கொள்ளாதவர்களை விட, அதிக வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்துக் கொண்டது ஆய்வு முடிவுகளில் தெளிவாகியுள்ளது. 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட ஒரு குழுவினர் மற்றும் 60 முதல் 80 வயதிற்கு உட்பட்ட மற்றொரு குழுவினர் இரு தரப்பினர் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இளைய தலைமுறைகள் அதிக வார்த்தைகளை ஞாபகம் வைத்துக் கொண்டது தெரிய வருகிறது.
குட்டி தூக்கம், வயதானவர்களின் ஞாபக சக்திக்கு அதிகரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், இது வயதானவர்களுக்கு ரத்த அழுத்தத்தை குறைத்து அவர்களுக்கு ஏற்படும் டிமென்சியா பாதிப்பில் அளவை குறைக்கிறது. வயதானவர்கள் குட்டி தூக்கம் அடிக்கடி போடுவது அவர்களின் உடல் நலத்திற்கு மிகுந்த நன்மையை விளைவிக்கிறது.
மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுவது பல்வேறு பாதிப்புகளில் இருந்து ஒருவரை காக்க உதவுகிறது. நடுத்தர வயது ஆண் மற்றும் பெண்கள், குட்டி தூக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டால், அவர்களது உடலில் ரத்த அழுத்தம் குறைந்து அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும் என்பது திண்ணம்.






Comments
Post a Comment