மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம் போடுவதனால் வரும் நன்மை என்ன? ஆபத்துகள் என்ன?
மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம் போடுவதனால் வரும் நன்மை என்ன? ஆபத்துகள் என்ன? அலுவலகத்தில், நாம் சற்று நேரம் கண் அயரும் போது, அதை நமது உயர் அதிகாரி பார்த்து விட்டால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து நமக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன் அவர்களின் கருத்துப்படி, இரவில் மட்டுமே தூங்க வேண்டும் என்பது இல்லை. இது நமது வாழ்க்கை முறைக்கு உகந்ததும் அல்ல. மனிதன் போன்ற பாலூட்டி விலங்குகளில், உறக்கம் மேற்கொள்ளும் முறைகளில் பெரிய வேறுபாடுகளே நிலவி வருகின்றன. பகல் தூக்கம் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள், பகல் நேரங்களில் சிறிது நேரம் உறக்கம் மேற்கொள்வது மிக சாதாரணமான நிகழ்வே ஆகும். வேலை பார்க்கும் இளைய தலைமுறையினரும் இந்த நடைமுறையை பின்பற்றினால் அதிக நன்மைகள் விலையும் என்பது நிபுணர்களின் கருத்துக்களாக உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில், மக்களின் உரக்க நேரம் என்பது மிகவும் குறைவான அளவில் உள்ளது. மதிய உணவுக்குப் பிறகு அரை மணி நேர உறக்கம் மேற்கொள்வதால், அது நம்மிடையே விழிப்புணர்வை அதிகரிக்க உதவுகின்றன. நாம் மிகவும் சோர்வாக இருக்கும் போது, நம்மையே அறியாமல், பல...