மனஅழுத்தமா? Stress-ல் இருந்து வெளியே வர கூலான ஐந்து எளிய வழிகள்!!! இனி Stress-க்கு சொல்லுங்க குட் பை
மன அழுத்தம் ரொம்ப அதிகமாக இருக்கா... இந்த 5 விஷயத்தை பண்ணுங்க கூல் ஆகிடுவீங்க...
ரொம்ப மன அழுத்தமாக உணர்கிறீர்களா? மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மன அழுத்தம்(stress) எல்லோருக்கும் இருக்கிறது. அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. அவற்றை அறுதியிட்டு கூற முடியாது. அதை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். மிக எளிமையான முறையில் மன அழுத்தத்தை நீர்வகிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
மன அழுத்தம் என்பது வெறும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மட்டும் இருப்பதில்லை. அது அதிகரிக்கும் போது உடலில் பல்வேறு எதிர்மறை மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக ரத்த அழுத்தம் அதிகரிப்பது, இதய நோய்களுக்கு முக்கியமான காரணமாக இந்த மன அழுத்தம் தான் இருக்கிறது. அதோடு உடலில் பல்வேறு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளையும் இந்த மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடும். அதனால் முடிந்தவரை மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிப்பது நல்லது.
மன அழுத்தத்தை குறைக்கும் உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கக்கூடியது.
தினமும் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் என்டோர்பின்கள் என்னும் நேர்மறை ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன.
நேர்மறை உணர்வுகள் அதிகரித்து மன அழுத்தம் வெகுவாக குறைகிறது.
மன அழுத்தத்தினால் நம்முடைய உடல் தசைகளும் அதிர்வுக்கு உள்ளாகும். அதனால் தான் பதற்றம் அதிகரிக்கிறது. இந்த பதட்டத்தை குறைப்பதற்கு உடற்பயிற்சி மிக உறுதுணையாக இருக்கிறது. அதற்காக கடினமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.
நடை பயிற்சி, ஜாகிங், ஜம்பிங் போன்ற எளிமையான பயிற்சிகளை செய்தால் கூட போதுமானது. அது அன்றைய நாள் முழுவதையும் புத்துணர்வோடு வைத்திருக்கச் செய்ய உதவும்.
நீண்ட நாட்களாக மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதயம் சம்பந்தம்பட்ட பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும் or call 9942613161.
மன அழுத்தத்தை குறைக்கும் திட்டமிடல்
எந்த வேலை செய்வதாக இருந்தாலும் சரி, அது சிறியதோ அல்லது பெரியதோ அது குறித்த முறையான திட்டமிடல் மிக அவசியம். சின்ன சின்ன விஷயங்களுக்கும் முறையான திட்டமிடல் இருந்தாலே தேவையில்லாத டென்ஷன், மணப்பதட்டம் ஆகியவற்றை தவிர்க்க முடியும்.
திட்டமிடல் எதுவும் இல்லாமல் சீரற்ற முறையில் உங்களுடைய வேலைகளைச் செய்யும்போது தான் மன அழுத்தம் உண்டாகிறது. இது உயர் ரத்த அழுத்தம் நரம்பு மண்டலங்களில் பிரச்சனைகள் ஆகியவற்றை உண்டாக்குகின்றன.
அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலை, எந்தெந்த வேலைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் போன்றவற்றைப் பற்றி முதல் நாள் இரவு தூங்குவதற்கு முன்பாக திட்டமிடுங்கள். ஒரு பேப்பரில் எழுதுங்கள்.
எந்தெந்த வேலையை எப்போது முடிக்கலாம், எந்த வேலைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்த படிநிலைகளை உருவாக்குங்கள். அது உங்களுடைய வேலையை எளிதாக்குவதோடு மிகச் சரியாக செய்து முடிக்க உதவியாக இருக்கும். இதனாலும் தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
மன அழுத்தத்தை குறைக்கும் ஆழ்ந்த சுவாசம்
மன அழுத்தமும் உடல் பதட்டமும் ரத்த அழுத்தத்தை மட்டுமல்லாது நம்முடைய சுவாச மண்டலத்தையும் அதன் சீரான சுவாசத்தையும் கூட பாதிக்கச் செய்யும்.
அதனால் மன அழுத்தத்தில் இருக்கும்போது, ஆழமாக மூச்சை இழுத்து விடுவது, சிறிது நேரம் மூச்சு பயிற்சி செய்வது போன்றவை இதயத்துடிப்பு அதிகரிக்கச் செய்யாமல் சீராக வைத்துக் கொள்ளவும் உடல் தசைகளை தளர்வாக வைக்குவும் உதவும்.
அதனால் மனச்சோர்வு(depression), மன அழுத்தம்(stress) ஆகியவை ஏற்படும் போது ஆழமாக சுவாசத்தை உள்ளிழித்து மெதுவாக வெளியேற்றுங்கள். அது மன பதட்டத்தை குறைக்கும்.
உங்களுக்கென்று நேரம் ஒதுக்குங்கள்
எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அவ்வப்போது உங்களுக்கே உங்களுக்கென்று கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்.
அது ஓய்வெடுப்பதற்காகவோ அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்காகவோ இருக்கலாம்.
மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வரும்போது நம்முடைய உடல், மனம் இரண்டுமே பாதிக்கப்படும். இதனாலேயே பெரும்பாலும் குறுகிய மனம் உடையவர்களாக மாறிவிடுகிறார்கள். அதனால் தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து விட்டு, புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது, வீட்டிலுள்ள சின்ன சின்ன குழந்தைகளுடன் விளையாடுவது ஆகியவற்றை செய்யலாம்.
அதே போல மனதுக்கு அமைதி தருகிற, உங்களுக்கு பிடித்த இடங்களுக்குச் சென்று வாருங்கள். மனம் லேசாகும்.
மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்
மன அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கு தியானம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
நினைவை ஒருமுகப்படுத்துதல், தியானம் போன்றவற்றை நீங்கள் இதுவரை செய்ய தொடங்கவில்லை என்றால் இன்றிலிருந்து அதைத் தொடங்குங்கள்.
மன அழுத்தத்தை குறைக்கவும் அதை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மிகச்சிறந்த பயிற்சி முறையாக தியானம் இருக்கிறது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலையில் சிறிது நேரம் அதேபோல இரவு தூங்கும் முன் சிறிது நேரம் தியானம் செய்வது நல்லது.
ஏன் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்
மன அழுத்தம் ஆரம்பத்தில் அவ்வப்போது வந்து போவது போல தோன்றும். தலைவலி மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்துவது முதல் ஹார்மோன் செயல்பாடு. ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கச் செய்வதோடு உறவுகளின் அடிப்படையில் அது சில பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எல்லா மன அழுத்தத்தையும் தவிர்க்க திட்டமிடுவது எதார்த்தமான இலக்காக இல்லாவிட்டாலும், தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டியது மிக அவசியம். அது மனம், உடல் இரண்டையும் அமைதிப்படுத்தும்.
Get in touch for proper advice for chronic stress, high blood pressure, high cholesterol, heart related problems, call 9942613161









Comments
Post a Comment