சர்க்கரை நோய் ஒரு நோயா அல்லது சத்து குறைபாடா?? இது யார் யாரை பாதிக்கும் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!
நீரிழிவு என்றால் என்ன? அது ஒரு நோயா?
- நீரிழிவு என்பது நீண்ட காலமாக நீடித்து இருக்கும் ஒரு வகை குறைபாடு.இது கணையத்தால்(Pancreas) இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் சரியாக பயன்படுத்த முடியாத போது ஏற்படும்.
- நீரிழிவு நோயல்ல அது நம் உடலில் ஏற்படும் இன்சுலின் குறைபாடு ஆகும். இன்சுலின்(Insulin) என்பது கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன்.
- இன்சுலின் செயல்பாடு சரியாக நடக்கவில்லை என்றால், உடலில் உயர் இரத்த சர்க்கரை அல்லது குறைந்த இரத்த சர்க்கரை ஏற்படுகிறது.
உயர் ரத்த சர்க்கரை:
- இங்கே, சர்க்கரையை உறிஞ்சுவதை கட்டுப்படுத்த போதுமான இன்சுலின் இல்லை அல்லது உடல் செல்கள் குளுக்கோஸை திறம்பட உறிஞ்சுவதில்லை.
- பெரும்பாலும் உயர் ரத்த சர்க்கரை நிலையை நீரிழிவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
குறைந்த இரத்த சர்க்கரை:
- ஒருவர் சரியான உணவை உண்ணாதபோது ரத்த சர்க்கரை குறைவு ஏற்படுகிறது. எனவே உடல் செல்கள் உறிஞ்சுவதற்கு உணவில் இருந்து குளுக்கோஸ் குறைவாக கிடைக்கும்.
- இரத்த சர்க்கரை குறைவு ஆபத்தானது. தலைச்சுற்றல், பலவீனம், வலிப்பு, நினைவிழப்போடு நம்மை மரணம் வரை அழைத்துச் செல்லும் ஆற்றல் மிக்கது.
நீரிழிவு வகைகள்:
மேலே விளக்கப்பட்டுள்ளபடி, இன்சுலின் உடல் செல்களால் ரத்த சர்க்கரை உறிஞ்சுதலை கட்டுப்படுத்துகிறது. இந்த செயல்பாட்டில் ஏதாவது குறை இருந்தால் வகை 1 ( Type 1 ) மற்றும் வகை 2 ( Type 2 ) நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது.
எந்த உணவு கட்டுப்பாடுமின்றி உங்கள் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர விரும்பினால் தொடர்பு கொள்ளவும், 9942613161 (call/whatsapp) or click here
வகை - 1 நீரிழிவு ( Type - 1 Diabetes ) :
- இங்கே, உடல் இன்சுலின் உற்பத்தி செய்யாது. ஏனெனில் இன்சுலின் சுரக்கும் கணையத்தில் உள்ள பீட்டா ( Beta ) செல்களை நோய் எதிர்ப்பு அமைப்பு தாக்கியுள்ளது. இதன் விளைவாக, உடல்செல்கள் நுகர்வுக்கு இரத்த சர்க்கரையிலிருந்து போதுமான சக்தியின் பெற முடியவில்லை.
- கல்லீரல் உடல் செல்களின் மூலம் கொழுப்பு செல்களை உடைத்து ஆற்றலாக மாற்றுகிறது. இது கீட்டோன்களை(Ketone) உருவாக்குகிறது. காலப்போக்கில், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான ஹீட்டோன்கள் நீரிழிவு கெட்டோ ஆசிடோசிஸ்(Diabetic Ketoacidosis) எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றன.
வகை - 2 நீரிழிவு ( Type - 2 Diabetes ) :
- உடல் செல்கள் இன்சுலினிலிருந்து சிக்னலை எடுத்து ரத்தத்திலிருந்து சர்க்கரையை உறிஞ்சும்போது, அவை இன்சுலின் உணர்திறன்(Insulin sensitive) என்று கூறப்படுகிறது ஆனால் இந்த சிக்னலை அவர்கள் கவனிக்காத போது பல்வேறு காரணங்களால், அவை இன்சுலின் எதிர்ப்பு(Insulin resistant) ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
- இதை ஈடுசெய்ய, கணையம் மேலும் மேலும் இன்சுலினை சுரக்கிறது. இது ஹைபிரின்சுலேமியா( hyperinsulemia ) என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் அதிகப்படியான வேலை பீட்டா செல்களை தேய்க்கிறது. எனவே, இன்சுலின் உற்பத்தியும் படிப்படியாக குறைந்து உயர் ரத்தச் சர்க்கரை அளவை உருவாக்குகிறது. இது டைப்-2 நீரிழிவு நோய்.
நீரிழிவு உடலில் எந்தப் பகுதிகளை பாதிக்கும்?
- இதயம்
- சிறுநீரகம்
- கண்கள்
- நரம்பு மண்டலங்கள்
- சிறு மற்றும் பெரு ரத்த நாளங்கள் வீக்கம் அடைதல்
- கால் பாதம்
நீரிழிவு மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை உளவியல் ரீதியாகவும், உடல் நலம் ரீதியாகவும் தொடர்ந்து ஏற்படுத்துகிறது.
நீரிழிவின் அறிகுறிகள்:
- அடிக்கடி பசி மற்றும் தாகம் ஏற்படுதல்
- எடை இழத்தல்
- அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மேம்படுதல்
- கண்மங்கலாக தெரிவது
- குழப்பம்
- உடல் மற்றும் மனம் சோர்வு ஏற்படுத்தல்
- இரட்டை பார்வை உண்டாகுதல்
- அடிக்கடி பல் ஈறு, தோலில் நோய் தொற்று உண்டாகுதல்
- உடம்பில் ஏற்பட்ட ரத்தக்காயம் குணமாக பல காலம் எடுத்துக் கொள்ளும்
- அடிக்கடி மன உளைச்சல் உண்டாகுதல்
- கால் மற்றும் உள்ளங்கையில் ஏற்படும் எரிச்சல்கள்
நீரிழிவால் ஏற்படும் மோசமான விளைவுகள்:
- இரத்த நாளங்கள் நரம்பு மண்டலங்கள் அதன் தொடர்புடைய உறுப்புகளை செயலிழப்பது.
- 65% நீரிழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதயம் செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் இறந்திருக்கிறார்கள்.
- நீரிழிவால் கண்கள் முக்கியமாக பாதிப்படையும். நீரிழிவு ரெட்டினோபதியால் ரத்த நாளங்கள் பாதிப்படைந்து கண்கள் குருடாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
- நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைவதால் நரம்பு வலி மற்றும் உணர்ச்சியின்மை நிகழலாம்.
- கால் மற்றும் கால் தொற்றுகள், கால் துண்டித்தல் மற்றும் குடலிறக்கம் ரத்த ஓட்டம், திசுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நரம்பு சேதம் ஆகியவை ஏற்படுகிறது.
- சிறுநீரக பாதிப்பு(நீரிழிவு நெப்ரோபதி) நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிய ஆபத்தாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
நீரிழிவு நோய் வகை இரண்டுக்கான சிகிச்சை முறைகள்:
- ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மேற்கொள்ளுதல்.
- நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்.
- உடல்பருமனை குறைத்தல்.
- மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை இன்சுலின் எடுத்துக் கொள்ளுதல்.
- சரியான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் டைப் - 2 நீரில் குணப்படுத்தி இன்சுலின் மற்றும் மாத்திரை இல்லாத வாழ்க்கையை வாழ முடியும்.
உணவு மற்றும் வாழ்க்கை முறைகள்:
- ரத்த அழுத்தத்தையும் கெட்ட கொழுப்புகளையும் உணவு உண்ணும் முறையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும்.
- உங்கள் மருத்துவர் அல்லது உணவு ஆலோசனை நிபுணர் பரிந்துரைத்த சத்தான உணவு வகைகளை சாப்பிடவும்.
- சிறந்த உடற்பயிற்சிகளை குறைந்தது 30 நிமிடங்களுக்கு செய்ய வேண்டும்.
- அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
- மது
- ஜூஸ் வகைகள்
- சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள்
- தேன், சர்க்கரை மற்றும் இனிப்புகள்
- உலர்ந்த பழங்கள்
- கேக்
பொறித்த உணவுகள் மற்றும் குளிர்பானங்கள்.
Get in touch if you want to control your diabetes without any diet restrictions, call/whatsappp 9942613161 or click here












Comments
Post a Comment