வெறும் 30 நாட்களில் உடல் எடையை குறைக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க

 வெறும் 30 நாட்களில் உடல் எடையை குறைக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க 


30 நாட்களில் வீட்டிலிருந்தபடியே உடல் எடையை குறைக்க இந்த விஷயங்களை செய்தாலே போதும் நல்ல ரிசல்ட் கிடைக்கும் 




இன்றைய நாளில் உடல் பருமன் பிரச்சனை பலருக்கும் தலையாயப் பிரச்சனையாக மாறி வருகிறது. பெண்கள், ஆண்கள் என இரு பாலரும் உடல் எடையை குறைக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஜிம், ஒர்க்அவுட் தொடங்கி டயட், டீட்டாக்ஸ். ஆயுர்வேதம் என எல்லா வைத்தியங்களையும் இதற்காக செய்ய தயாராக இருக்கிறார்கள் அந்த அளவுக்கு உடல்பருமனை குறைக்க இன்றைய தலைமுறை அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது. இணையதளங்ககளில் வெயிட் லாஸ் சேலஞ்ச் என்ற பெயரில் பல விஷயங்கள் பரவி வருகின்றன. அந்த வகையில் 30 நாட்களில் வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைக்கும் ரகசியம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.



உணவில் சில மாற்றங்கள், தேவையான உடல் உழைப்பு இவை இரண்டும் செய்தாலே போதும் உடல் எடை தானாக குறைந்து விடும். இந்த 30 நாட்களில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.


எடை இழப்புக்கான ஆரோக்கியமான காலை உணவு 



இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே நீண்ட இடைவெளி தேவை. அத்தகைய சூழ்நிலையில், உடலுக்கு ஆற்றலை வழங்க காலை உணவு மிகவும் முக்கியமானது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும், புரதச்சத்து நிறைந்த முட்டைகள், நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் ஆகியவற்றை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எந்த காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்கக்கூடாது. இதனால் எடை கூட அதிக வாய்ப்பு உள்ளது.


10,000 ஸ்டெப்ஸ்



 தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க முயற்சி செய்யுங்கள். இதை தொடர்ந்து 30 நாட்கள் செய்ய வேண்டும். தொடக்கத்தில் 10,000 படிகள் முடியாவிட்டால் குறைந்த படிகளில் தொடங்கி படிப்படியாக 10,000 படிகளை அடையுங்கள். நடை பயிற்சி, நடனம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். லிப்ட் பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் பார்க் அல்லது சாலையில்  தான் வாக்கிங் செல்ல வேண்டிய தேவை இல்லை.வீட்டு மாடியில் நடக்கலாம்.


தவிர்க்க வேண்டியவை



 எண்ணெயில் பொரித்தவை, ஜங்க்புட்ஸ், ஸ்னாக்ஸ், டீ, காபி ஆகியவற்றை அறவே நிறுத்தி விட வேண்டும். மதிய உணவில் அதிக அளவு புரதம் இருக்க வேண்டும். முடிந்தவரை வெள்ளை சாதத்தை கொஞ்சமாக எடுத்துவிட்டு சிவப்பரிசி, திணை சேர்த்துக் கொள்ளலாம்.


காலை உணவு 



காலை உணவை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் நம்முடைய உயரத்துக்கு ஏற்ற எடையை நாம் பெற முடியும். நம்முடைய காலை உணவில் நம்ம உடம்புக்கு தேவையான ஊட்டச்சத்து அனைத்தும் நம் உடலுக்கு கிடைக்கிறதா என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.நம்முடைய காலை உணவில், புரதச்சத்து மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. ஆனால், நம் காலை உணவை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் எப்படி நாம் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக மாற்றுவதே நாம் பார்க்க வேண்டும். நம்முடைய காலை உணவில் புரதச்சத்து மட்டுமின்றி நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்ற அனைத்து வகையான சத்துகளும் நம் காலை உணவில் எடுப்பதன் மூலம் நாம் உயரத்துக்கு ஏற்ற எடையை அடைவது மட்டும் இல்லாமல் நம்முடைய காலை உணவை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் நான் முழுவதும் புத்துணர்ச்சியாகவும் நாம் செயல்படுவோம்.

நம்முடைய காலை உணவை ஆரோக்கியமாக மாற்ற வேண்டுமா உடல் எடையை சீக்கிரமாக நாம் குறைக்க வேண்டுமா தொடர்பு கொள்ளுங்கள்.


தண்ணீர் குடிக்க வேண்டும்



 நிபுணர்களின் கூற்றுப்படி எடை இழப்புக்கு சரியான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது ஆனால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.தண்ணீர் குடிப்பதன் மூலம் வளர்ச்சிதை மாற்றமும் மேம்படும் மற்றும் பல பிரச்சனைகளும் நீங்கும். சர்க்கரை பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்கவும். இந்த குறிப்புகளை 30 நாட்களுக்குப் பின்பற்றினால் எளிமையாக 5 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன் இந்த பதிவு பிறருக்கும் பயன் பெற இதனை பகிரலாம்.


Do we want to make our breakfast healthy and do we want to lose weight, contact 994263161(Call/WhatsApp).

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)