சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா?
சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா? உணவு உட்கொண்ட பிறகு சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இந்த பழக்கம் பழங்காலம் முதலே உலகெங்கிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. சாப்பிட்டதும் நிதானமாக சிறிது நேரம் உலவுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அத்தகைய நடைப்பயிற்சியை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்ப்போம். செரிமானத்திற்கு உதவும் : உணவு உட்கொண்டதும் நிதானமாக நடைப்பயிற்சியில் ஈடுபடுவது செரிமான அமைப்பின் செயல்பாடுகளை தூண்டிவிட உதவும். குறிப்பாக செரிமான பாதைக்கு இடையூறாக இருப்பவற்றை நிவர்த்தி செய்து உணவு தடையின்றி செரிமானமாக ஊக்குவிக்கும். நடக்கும்போது செரிமான செயல்பாடுகள் சுமுகமாக நடப்பதால் உணவில் இருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துகள் முழுவதையும் உடல் உறிஞ்சும் செயல்முறையும் சீராக நடைபெறும். உணவு உண்டபின் நடப்பதன் மூலம் வயிற்று உப்புசம், அஜீரணம் போன்றவற்றுடன் தொடர்புடைய அசவுகரியன்களையும் தவிர்க்கலாம். ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும்: ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதில் உணவுக்கு பிந்திய நடைப்பய...