இளம் வயதிலேயே கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படும் சிறுவர்கள் !!
பார்வை குறைபாடு அதிகரிப்பு :-
இயற்கையை ரசிக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பு கண்களுக்கு மட்டுமே கிடைத்து இருக்கிறது.ஆனால் இந்த கண்களை பாதுகாப்பதில் நாம் பலரும் இன்று அலட்சியம் காட்டுவதால்,பல்வேறு பின்விளைவுகளை சந்திக்கின்றோம்.முதுமை வயதை அடைவதற்கு முன்பே கண்பார்வை மங்கி போவது,கண் கண்ணாடி அணிவது உள்பட ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்.
இளம் வயதினர் :-
தற்பொழுது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை பிரச்சனை அதிகரித்து,கண்ணாடி அணியும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.ஊட்டச்சத்து குறைபாடு,டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அதிர்ச்சி தகவல் :-
வளரும் நாடுகளில் பார்வை திறன் குறைபாடு அதிகரிப்பு :
கடந்த ஆண்டுஅதிலுள்ள வளரும் நாடுகளில் 90 சதவீதம் பார்வை குறைபாடு உடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்றஅதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.மேலும் ஒரு நிமிடத்திற்கு ஒரு குழந்தை பார்வையற்றதாக மாறுவதாகவும்,உலகில் 60 லட்சம் குழந்தைகள் பார்வையற்றவர்களாகவும் மாறுவதாகவும்,இவர்களில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் வாழ்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Eye Dr) கண் மருத்துவர் மீனாட்சி கூறுவதாவது :-
வெயிலில் விளையாட வேண்டும் :
பிறக்கும் குழந்தைகள் தூரப்பார்வையுடன் பிறந்தாலும், நான்கு வயதிற்குள் தானாக சரி ஆகிவிடும்.ஆனால் குழந்தைகள் அதிக நேரம் டிவி,செல்போன்,பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடும் பொழுது கண்களில் பாதிப்பு ஏற்படும்.சிறுவர்,சிறுமிகள்,தினமும் காலையில் மிதமான வெயிலில் ஒரு மணி நேரம் விளையாடினால் பார்வை குறைபாடு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.உடலுக்கு தேவையான வைட்டமின் D சத்தும் கிடைக்கிறது.
ஆசிரியர்களின் கருத்து:-
எண்ணெய் தேய்த்து குளிக்க ....
நூடுல்ஸ்,பரோட்டா,போன்ற துரித உணவுகளைத்தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர்.மேலும் செல்போன்,டிவியில்,அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.மேலும் சத்தான உணவுகளான மீன்,கீரை,முட்டை,பருப்புவகைகள்,முளைவிட்ட தானியங்கள்,பழங்கள்,பச்சை காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவதன் அவசியம் தெரியாமல் அதை தவிர்ப்பதனால் இன்று இளம் வயதிலேயே கண் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது.
கோவில்பட்டி கண் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் :-
குழந்தைகள் தொடர்சியாக செல்போன் பயன்படுத்துவதால் கண்ணில் உள்ள தசைகள் தளர்ந்து போகலாம்.மேலும் கண்களில் உலர்ந்த தன்மையை உருவாக்கும்.சமீப காலத்தில் செல்போனில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பது,இது போன்றவைகள் கூட அத்தியாவசியம் தவிர மற்றவற்றிற்கு தவிர்ப்பது நலம் பயக்கும்.முக்கிய தேவை தவிர மற்றவர்களுக்கு குழந்தைகளுக்கு செல்போன் பயன்பாட்டை குறைப்பது அவர்களின் கண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நலம் பயக்கும்.புத்தகத்தை அருகில் வைத்து பார்ப்பது அல்லது வாசிப்பது கண்களின் பார்வை திறனை குறைக்கும்.மேலும் மிக சிறிய எழுத்துக்களை பார்ப்பது போன்றவையும் பார்வை திறனை குறைக்கும்.
வளரும் நாடுகளில் பார்வை திறன் குறைபாடு அதிகரிப்பு :-
கடந்த ஆண்டு இறுதியில் 2022 வெளியான உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி ,உலகம் முழுவதும் 28 கோடியே 50 லட்சம் பேர் பார்வை திறன் குறைபாட்டால் பாதிப்பு அடைந்தவர்களாக இருப்பதாகவும்,அதில் 3 கோடியே 90 லட்சம் பேர் பார்வை இழந்தவர்களாகவும்,24 கோடியே 60 லட்சம் பேர் குறைந்த பார்வை திறன் உடையவர்களாகவும்,இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி தகவல் :-
வளரும் நாடுகளில் பார்வை திறன் குறைபாடு அதிகரிப்பு :
கடந்த ஆண்டுஅதிலுள்ள வளரும் நாடுகளில் 90 சதவீதம் பார்வை குறைபாடு உடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்றஅதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.மேலும் ஒரு நிமிடத்திற்கு ஒரு குழந்தை பார்வையற்றதாக மாறுவதாகவும்,உலகில் 60 லட்சம் குழந்தைகள் பார்வையற்றவர்களாகவும் மாறுவதாகவும்,இவர்களில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் வாழ்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்களை பாதுகாக்க சிறிய டிப்ஸ் :-
1) வெளிச்சம் குறைந்த இடத்தில் படிப்பதை தவிர்க்க வேண்டும்.
2) பச்சை நிற காய்கறி வகைகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .
3) கண்களுக்கு அதிகம் அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபடுவதை கைவிட வேண்டும்.
4) இரவு படுக்கைக்கு செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு டிவி,செல்போன்,கணினி,ஆகியவற்றை தீர்க்க பழகவேண்டும்.
5) மாசு,தூசுகளினால் கண்கள் பாதிப்படையாமல் இருக்க,வெளிய சென்று வீடு திரும்பியதும் கண்களை தூய நீரில் கழுவ வேண்டும்.
6) கண்கள் தொடர்பான பயிற்சியை அவ்வப்போது மேற்கொள்வது அவசியம்.












Comments
Post a Comment