தைராய்டு என்றால் என்ன?
தைராய்டு என்றால் என்ன ? தைராய்டு என்பது கழுத்தின் கீழ் பகுதியில் வண்ணத்து பூச்சியின் வடிவத்தில் அமைந்துள்ளது . கழுத்து பகுதியில் உள்ள ஒருவகையான சுரப்பி . தைராய்டு சுரப்பி நாளமில்லா சுரபிகளுள் (endocrine system) ஒன்று . தைராய்டு சுரப்பியின் மொத்த எடை 20–60 கிராம்கள் . மூச்சுகுழாயயை சுற்றி இருக்கும் இந்த தைராய்டு சுரப்பியை இணைப்பது இஸ்துமஸ் (isthumus) எனப்படும் . தைராய்டு சுரப்பி நிறைய ஹார்மோன்களை சுரக்கும் . தைராய்டு ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கலந்து உடலின் பல பகுதிகளுக்கு சென்று உடல் இயங்க உதவி புரிகின்றது . ஓர் அறிவியல் ஆய்வின்படி ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனைகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கால்சிடோனின் (Calcitonin), ட்ரினிடோதரோனின் (Triiodothyronine or T3), தைராக்சின் ( T4 ) எனப்படும் மூன்று வகையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி சுரக்கின்றது . இந்த T 4( தைராக்சின் ) ஹார்மோன் வளர்ச்சி மற்றும் வளர்சிதைவு (metabolism ) ஆகிய செயல்களில் நமது உடலில் ஈடுபடுகின்றது ...