தேன் நெல்லிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள்

                 தேன் நெல்லிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள் 


தேன் நெல்லிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள் 
                             


பலவித உடல் பிரச்சனைக்கும் தீர்வுதரும் தேன் நெல்லிக்காய் :-

தற்போது தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி அனைவராலும் கூறப்படுகிறது.இதை நாம் நாள்தோறும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

மருத்துவகுணங்கள் :-
    
இந்த நெல்லிக்காயை நாம் பொதுவாக சாப்பிடுவதால் இதில் உள்ள வைட்டமின் சி சத்து நமக்கு ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வாக அமைகிறது.


ரத்த சோகை:-

இந்த நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் இரட்டிப்பான நன்மையாக ரத்த சோகை என்ற நோயின் 
பாதிப்பில் இருந்து விடுபடும் வாய்ப்பும் கிடைக்கிறது.

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதன் மூலம் தேனில் உள்ள இரும்பு சத்து நமக்கு கிடைக்கிறது.

இதயம் வலுவடைய :-
                                        

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதன் மூலம் நம்முடைய இதைய பலவீனங்கள் தீர்க்கப்பட்டு, இதயம் வலுவடைந்து,இதய படபடப்பு ,இதய சம்பந்தமான கோளாறுகள் நீங்குகிறது என ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.

கண்சம்பந்தமான பிரச்சனைகள் நீங்க:-   


இந்த தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதன் மூலம் கண்ணில் வரும் அரிப்பு,தடிப்பு,நீர் வடிதல்,கண் சிவத்தல்,போன்ற ஒவ்வாமை நோய்கள் தடுக்கப்படுகிறது.
       
இவ்வகையான கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வைட்டமின் சி குறைவால் ஏற்படும் நோய்களாகும் எனவும் ,இது இவ்வகையான உணவுகளின் மூலம் நிவாரணம் கிடைக்கும் என உணவு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.
              
தலைமுடி கருத்து,இளநரை மறைய:-

இன்றைய தலைமுறையினரை வாட்டி வதைக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இளநரை பிரச்சனை.இது போன்ற பிரச்சனைகள் நம் தலைமுடியில் உள்ள மெலனின் என்ற சத்து பொருள் குறைவதன் மூலம் ஏற்பட்டு,நாளடைவில் இளநரை,முடி கொட்டுதல்,தலை பொடுகு போன்ற அனைத்துக்கும் முற்று புள்ளியாக இந்த தேன் நெல்லிக்காய் அமைகிறது..தினமும் யார் ஒருவர் இந்த தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டுவருவாரோ அவர் அதன் பலனை அனுபவத்தின் மூலம் உணரலாம்.

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் :-
                         

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கவும் இந்த தேன் நெல்லிக்காய் ஒரு அருமருந்து.இதனால் வயிற்றில் ஏற்படும் வயிறு உப்புசம்,செரிமான கோளாறு,புளித்த ஏப்பம்,மந்தம்,பசி எடுக்காமை,பித்தம்,வாய்வு தொல்லை,போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இது அமைகிறது.

சிறுநீரகம் பாதுகாக்கப்படுகிறது:-
                              

இந்த தேன் நெல்லிக்காய் நம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளி ஏற்றும் வேலையை செய்து வரும் சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற
கழிவுகளோ ,கல் அடைப்போ,கொழுப்பு படிதல்,போன்ற இதர பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.

ஆண்மை குறைவுக்கு அற்புத நிவாரணி :-
                              

இந்த தேன் நெல்லிக்காய் சாப்பிட்டுவருவதன் மூலம் இதில் உள்ள வைட்டமின் சி சத்தானது நம் உடலில் உள்ள உமிழ் நீர் சுரப்பியை தூண்டிவிடுகிறது.

மேலும் இதில் உள்ள  வைட்டமின் சி சத்து மற்ற அனைத்தை காட்டிலும் இதில் அதிகமாகவே இருப்பதால்,இதன் மூலம் நம் ரத்த ஓட்டத்தை சீராக்கி ,ரத்தத்தில் உள்ள நச்சுக்கிருமிகள் நீங்கி,ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் எண்ணிக்கையை குறைய விடாமல் செயல்படுவதால் ,ஆண்மை குறைபாடு நீங்குகிறது.

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)