மருத்துவ குணமுள்ள களி நண்டு

மருத்துவ குணமுள்ள களி நண்டு 








காவிரி ஆற்றில் இருந்து ஆடி மாதத்தில் நன்னீர் சிதம்பரம் அருகில் உள்ள கிள்ளை ஆற்றுக்கு வருகை தரும்.அவை வருகை தந்ததற்கு அடையாளமாக கிள்ளை ஆறு முழுவதும் தாமரை மலர்கள் நிறைந்திருக்கும்.உலகின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நில சுரபுன்னை வனம்,கிள்ளை ஆற்றை சுற்றி உள்ளது.அவை அலையாத்தி காடுகள் எனவும் அழைக்கப்படுகிறது.

நாரைகளும்(கொக்கு)அறியாத நான்காயிரம் ஓடைகள் நிரம்பியது கிள்ளை ஆறு.அந்த ஆற்றில் உள்ள சில ஆழமான பகுதிகள் "குடா " என அழைக்கப்படுகிறது.கடலின் முகத்துவாரம் வழியாக வருகிற உப்பு நீரும்,கொள்ளிடம் ஆற்றின் வழியாக வருகிற காவிரி நீரும் அங்குதான் சங்கமிக்கும்.

சங்கமிக்கும் அந்த குடா பகுதியில்தான் ஒருசில நீரினங்கள் இனப்பெருக்கம் செய்யும்.நண்டு,இறால்,மீன்,ஆகிய உயிரினங்கள் ஜணிக்க உப்பு நீர் மட்டும் போதாது,அதனுடன் மழைநீர் அல்லது நன்னீர் தேவைப்படும்.இது நிலப்பகுதியில் வாழும் மக்கள் அறிவதில்லை.வெள்ள நீர் அபாயத்திலிருந்து பாதுகாக்கவே தண்ணீரை கடலிலே கலக்கிறார்கள் என்ற அளவில் மட்டுமே நினைக்கிறார்கள்.ஆனால் அது ஒரு இயற்கை சுழற்சி .

மீன்வளம் உருவாக நன்னீரின்  பங்கு மிக முக்கியமானது.சேற்றில் மூழ்கி தன்னை குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலையில் வைத்து வாழக்கூடியது களி நண்டு .சேற்றின் மறுபெயர் களி என்பதால் களி நண்டு என அழைக்கப்படுகிறது.

இந்த களி நண்டில் மருத்துவ குணம் உள்ளது.இந்த நண்டுகள் வரக்கூடிய நீரோடைகள் சுர புண்ணை மூலிகைகள் நிறைந்த நீரின் வழியாக வருவதால் சுர புன்னையின் மூலிகை வேர்களை உண்டு வாழ்வதால் இதில் மருத்துவ குணங்கள் உள்ளது .

இங்கு உற்பத்தியாகும் களி நண்டில் கொழுப்பு 9  சதவீதமும்,3 .2 சதவீதம் தாதுப்பொருட்கள்,3 .3  சதவீதம் மாவு சத்தும் 50 கலோரி ஏரிசத்து உள்ளது.

களி நண்டில்  வைட்டமின் பி ,விட்டமின் சி ,பாஸ்பரஸ் ,கால்சியம்,தாமிரம்,அயோடின்,மற்றும் மெக்னிசியம் இருக்கிறது.இதனால் களி நண்டை அனைவரும் விரும்பு சமையலில் சேர்த்து சாப்பிடுகின்றனர்.

மருத்துவ பயன்கள்:

நண்டை சாப்பிடுவதால் ஆஸ்துமா மற்றும் சளி கட்டுப்படுத்தப்படுகிறது .
இது ரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதால் சக்தி நிறைந்த உணவை கருதப்படுகிறது.
இந்த வகை களி நண்டை சூப் செய்து சாப்பிடுவதால் சளியை முறிக்கவும் செய்கிறது.

நண்டு கிடைக்க பெரும் இடங்களாக கிள்ளை,பழையாறு,பழவேற்காடு,முத்துபேட்டை போன்ற பகுதிகளிலும் கிடைக்கும் இவ்வகை நண்டுகள் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

கிள்ளை ஆற்றுப்பகுதியில் ஒரு சில அறிய வகை மருத்துவ குணம் உள்ள மீன்கள் உள்ளன.காரை,மட்லீஸ்,கிழங்கான்,பிழிஞ்சான்,ஓரா,பொருவா,
சித்தாளை,நரிக்கெண்டை, போன்ற மீன்களை கொண்டு ஒரு வகையான வட்டார மீன்குழம்பு செய்கின்றனர்.

இதில் அதிகமாக பூண்டு மற்றும் மிளகு சேர்த்து செய்வதால் மருந்து குழம்பு சென்று இது அழைக்கப்படுகிறது.இது பேறுகால பெண்களுக்கு வலி நிவாரணியாக மற்றும் மனசோர்வை போக்கவும் இது உதவுவதாகவும் சொல்ல படுகிறது.

பால் சுர தாய்ப்பால் பெருக்கத்திற்கும்,திலாப்பியாவில் உள்ள செலனியம் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.சால மீன் அயோடின் கழுத்து கழலை நோய் தடுக்கிறது.

மேலும் மத்தி,சூடை,கவலை,போன்ற மீன்களில் ஒமேகா 3  அமிலம் அதிகம் உள்ளதால் இதன் மூலம் ரத்தத்தில் கொழுப்பு படியாமல் தடுத்து ,இதைய பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

நோயற்ற வாழ்விற்கு இது போன்ற இயற்கை உணவுகளை தேவைப்படும் அளவிற்கு எடுத்து உணவில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)