உடல் நலம் காக்கும் உன்னத உணவுகள்
முக்கியமாக இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அவர்கள் பின்பற்றிய உணவு முறைகளான கைக்குத்தல் அரிசி,கேழ்வரகு,தானியங்கள்,முளைவிட்ட தானியங்கள்,முட்டை,காய்கறிகள்,பழங்கள்,பீன்ஸ்மற்றும் மிதமான வெள்ளை இறைச்சி,மீன் முழுதானிய பிரட்,பாஸ்தா போன்ற உணவுகளும் அடங்கும்.
இவ்வாறான உணவுகளை உண்டு வருவதை வழக்கமாகி கொண்டு வருவோர்க்கு உயர் ரத்த அழுத்தம்,ரத்தத்தில் கொழுப்பு படிவது,இதனால் வரக்கூடிய இருதய பாதிப்பில் இருந்து அதிகப்படியான பாதுகாப்பு கிடைக்கிறது.மேலும் அதிகப்படியான கொழுப்பு உடலில் தேங்காமலும் மற்றும் உடல் எடை கூடாமலும் இருக்க இந்த உணவு பழக்கம் இன்றியமையாத ஒன்றாகும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சி கழகம் சான்று பகர்கின்றது.
இதைப் பற்றி இங்கிலாந்து இருதய அறக்கட்டளையின் உணவு மூத்த ஆலோசகரான ஆராய்ச்சி நிபுணர் விக்டோரியா டெய்லர் அவர்களுடைய ஆராய்ச்சி கூற்று படி இது ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கம் என்று கூறப்படுகிறது.
இதை முறையாக பின்பற்றி வருவோர்கள் நீண்ட ஆயுளுடன்,ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இது வழி செய்கிறது.




Comments
Post a Comment