இளநரையை போக்க இனிமையான மருத்துவம்



 இளநரை :-

நரைமுடி என்பது மூப்பு எனும் வயது முதிர்ச்சியின் தொடக்கம்.
இளவயதில் நரை முடி என்பது பெரிய குமுறல்.

முன்பெல்லாம் நாற்பதை கடந்த பின்பு வந்த நரை முடி இப்போதெல்லாம் இருப்பதாய் தொட்டாலே வந்து வயதான தோற்றத்தை தருவது இளவயதினர்க்கு தாங்க முடியாத ஒன்றுதான்.

அறிவியல் பூர்வமாக பார்த்தால் மெலனின் எனும் கருப்பு நிறத்தை தரும் நிறமி சத்து குறைவாவதே இளநரைக்கு காரணம்.

இன்றைய நவீன உலகில் உணவு முறையின் மாற்றங்களால் அதிகமாக இளநரை ஏற்படுகிறது.

மேலும் மனஅழுத்தம்,வளர்ச்சிதை மாற்ற கோளாறு.மறந்த என்னை குளியல்,மறக்கப்படும் பாரம்பரிய உணவு முறைகள்,நொறுக்கு தீனிகள்,குளிர்பானங்கள் இவைகளே இளநரை ஏற்பட முக்கிய காரணங்கள்.

புதிதாக சந்தைகளில் விற்கப்படும் செயற்கை வேதி பொருட்கள் நிறைந்த சோப்பு,மற்றும் சேம்புகளும்,முடியின் லகை கெடுத்து இயற்க்கை அழகினை சிதைக்கிறது.

பரம்பரை காரணத்தாலும் தைராய்டு சுரப்பி சரிவர செயல்படாததாலும்,ரத்த சோகையாலும்,அதற்கு காரணமான  விட்டமின்கள் பி ௧௨,சி ,ஏ , இவற்றின் குறைபாட்டாலும்,மெலனின் நிறமியை உற்பத்தி செய்யும் மெலனோஸிட்ஸ்  எனும் செல்கள் பாதிப்பு அடைவதால் இளநரை உண்டாகின்றது.

இளநரையில் இருந்து மீள்வது எப்படி ????


இளநரையில் இருந்து மீள்வது ,வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.பித்தத்தை தூண்டும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மசாலா சேர்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பாக்கட்டுகளில் அடைக்கப்பற்று தின்பண்டகளை தவிர்ப்பது நல்லது.
நேரத்துக்கு சாப்பிடுவதும்,விட்டமின்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும்.
வைட்டமின் சி  அதிகம் உள்ள நெல்லி ,கொய்யா ,நார்த்தை ,மாதுளை,வைட்டமின் ஏ  தினம் உள்ள பப்பாளி ,இரும்பு சத்து அதிகம் உள்ள பேரிட்சை ,கறிவேப்பிலை ,அத்தி பழம் ,சர்க்கரைக்கு பதில் இரும்பு சத்து நிறைந்த பனை வெல்லம்,வைட்டமின் பி 12  அதிகம் உள்ள பால் மற்றும் மாமிச உணவுகளை உணவில் தவறாமல் சேர்த்து கொள்ள வேண்டும்.

கலிலீரலை பலப்படுத்தும் கரிசலாங்கண்ணி ,வைட்டமின் ஏ நிறைந்த சிறுகீரை,பொன்னகன்னி இவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

டீ,காபீ ,முற்றிலும் தவிர்ப்பது நலம்.அதற்கு மாற்றாக புரதசத்து நிறைந்த பாதாம் பருப்பு அல்லது முளைகட்டிய தானியங்கள் இவற்றில் பனை வெல்லம் சேர்த்து உண்பது நல்ல பலன் கிடைக்கும்.

பயோட்டின் எனும் வைட்டமின் பி 7  உள்ள மீன் ,உப்பு சேர்த்து  வறுத்த பாதாம் ,காலிபிளவர்முட்டைக்கரு,காளான்,பாலாடைக்கட்டி, போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

இள நரையை போக்குவதில்  செம்பு சத்து முக்கிய பங்காற்றுகிறது.
சிறுகீரை,கரிசாலை,போன்ற மூலிகை செம்பு சத்து நிறைந்தது.

உள்மருத்துவதோடு ,வெளி தடவும் தைலங்கள் சித்த மருத்துவதில் மருதாணி தைலம் ,அவுரி தைலம் ,அறுகீரை தைலம் போன்ற தைலங்களை பயன் படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

கருவேப்பிலையை அல்லது அவுரி இலையை தேங்காய் எண்ணெயில் போட்டு மூன்று நாட்கள் வெயிலில் வைத்து தலை முடி தைலமாக பயன்படுத்தலாம்.

நிலாவரை இலை,மருதாணி இலை,கடுக்காய் பொடி இவற்றை வெந்நீரில் ஊற வைத்து பசையாக்கி தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம்.

மனா அழுத்தத்தையும்,பித்தத்தையும்,குறைக்கும் .சீராக தைலம் ,வில்வாதி தைலம்,தாமரை தைலம் ,நெல்லிக்காய் தைலம் , இவற்றில் ஒன்றை எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம்.

மேற்கூறிய பாரம்பரிய வைத்தியத்தை பின்பற்றி இள நரையை தடுத்து இளமையோடு வாழலாம்.    

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)