ஆலிவ் எண்ணெய் மற்றும் அதன் பயன்களும்




பொதுவாக உணவுக்காக பயன் படுத்தப்படும் எண்ணெய்களில் MUFA, PUFA மற்றும் SFA என்ற 3 வித கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை வேறுபட்ட வீதங்களில் எண்ணெயில் காணப்படும்;. SFA என்ற கொழுப்பில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அது இரத்தத்தில் உள்ள தீய கொலஸ்டெரோலை (LDL) அதிகரிக்கச் செய்து விடும். ஆனால் MUFA நேர் எதிராக செயற்பட்ட வண்ணம் நல்ல கொலஸ்டெரோலை அதிகரிக்கச் செய்து தீய கொலஸ்டெரோலை குறைத்து விடும். அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்தின் ஆய்வு தரவுகளின் படி ஒரு மேசைக் கரண்டி ஆலிவ் எண்ணெயில் 72 % MUFA மற்றும் 10 % PUFA (இதுவும் 'நல்ல' கொழுப்பே) இருப்பதுடன் தீய கொழுப்பான SFA 13 % மாத்திரமே இருக்கின்றது. இதே வேளை இலங்கையில் அதிகமாக உட்கொள்ளப்படும் பாம் எண்ணெயில் 81 % இருப்பது SFA கொழுப்பாகும்! ஆலிவ் எண்ணெயை பயன் படுத்தி உணவு சமைத்தல் ஆலிவ் எண்ணெயை சமையலில் பயன் படுத்தும் போது, குறிப்பாக அதைக் கொண்டு எதையாவது வறுக்கும் அல்லது பொரிக்கும் போது புகை வரும் அளவு ஆலிவ் எண்ணெயை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக சூடாகும் போது ஆலிவ் எண்ணெயின் இரசாயன கட்டமைப்பு மாற்றமடைந்து அதில் உள்ள போஷனைப் பதார்த்தங்கள் வீணாகி விடுவது மட்டுமல்லாமல், உடலாரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய சில கொழுப்பு வகைகள் உருவாகின்றன. எந்தளவு ஆலிவ் எண்ணெய் சுத்தமாக இருக்கின்றதோ அந்தளவு அதன் பயன் முழுமையாக இருக்கும். எனவே ஆலிவ் எண்ணெயை எதுவும் செய்யாமல் அப்படியே பச்சை மரக்கரிகளுடன் சேர்த்து உண்பதே சமைத்த உண்பதை விட அதிக பயனுள்ளதாகும். மேலும் எக்ஸ்ட்ரா வேர்ஜின் எனப்படும் பதப்படுத்த ஆலிவ் எண்ணெய் வகைகளையும் தவிர்க்க வேண்டும். நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை ஆலிவ் எண்ணெயில் உள்ள பல்வேறுபட்ட கூறுகள் மூலம் உடலாரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள் பற்றி அறிய அண்மைக்காலத்தில் ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. அதன் போது இரத்த அழுத்தம், இருதய நோய், மூட்டு வாதம், மார்பு புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், சரும புற்றுநோய், குடல் மற்றும் சுவாசப்பை அழற்சி போன்ற நோய்களை ஆலிவ் எண்ணெய் தடுக்கின்றமை அல்லது அவற்றிற்கு சிகிச்iயாக செயற்படுகின்றமை புலனாகியது. வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள் 1. தீமையான கொழுப்புக்கள் அதிகமுள்ள எண்ணெய் வகைகளை நீங்கள் சமையலுக்குப் பயன் படுத்துவதாயின் அவற்றை ஒதுக்கி விட்டு ஆலிவ் எண்ணெயை பயன் படுத்த ஆரம்பித்தல் விவேகமாகும். ஆலிவ் ஆயிலில் நன்மை தரும் கொழுப்பு உள்ளது. இது உடலின் கெட்ட கொழுப்புகளை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை, இயல்பாக்குகிறது. ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், குறிப்பாக டைப் 2 டயாபடீஸைக் குறைக்க முடியும். வயது முதிர்வால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால், அதை தடுக்கும் ஆற்றல் ஆலிவ் ஆயிலுக்கு உண்டு. இதில் உள்ள நல்ல கொழுப்பு, லிபோபுரோடினை குறைத்து, இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது. தினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தினால், சரும கேன்சர், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் கேன்சர் போன்றவற்றை தடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)