சாப்பிட மறந்தாலும் இதை சாப்பிட மறக்காதீங்க!!!



வாழைப்பழம் :-

வாழைப்பழத்தில் கலோரிகள் குறைவு. ஆகவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, அதிகமான கலோரியை உட்கொண்டோமா என்ற ஓர் உணர்வைத் தவிர்க்கலாம். அதோடு காலை உணவாக வாழைப்பழம் சாப்பிடும் போது, அது வேலை நேரத்தில் கண்ட உணவுகளின் மீதுள்ள ஆவலைத் தடுக்கும்.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. சொல்லப்போனால் வாழைப்பழம் செரிமான மண்டலத்திற்கு நண்பன் போன்றது. இது எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருள். ஆகவே வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுகிறோமே என்ற ஓர் எண்ணம் எழுந்தால், அதை விட்டொழியுங்கள். வாழைப்பழம் செரிமான மண்டலத்திற்கு கடுமையான வேலையைக் கொடுக்காமல், அதற்கு மாற்றாக செரிமான மண்டலத்திற்கு ஒரு வகையான உயவுப் பொருளை வழங்கும். சுவையான மற்றும் மென்மையான வாழைப்பழம், செரிமான பாதையில் எளிதில் நகர்ந்து செல்லக்கூடியது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வின் போது, வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி, சோர்வில் இருந்து விடுவிக்கும். ஆகவே அன்றாட காலை உணவில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து வந்தால், அது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும் வாழைப்பழம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் நொதிகளையும் உற்பத்தி செய்யும்.

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)