புற்று நோய்
இன்று புற்று நோய் தினம்!
செல்களின் கூட்டமைப்பில் உருவானதே மனித உடல். நவரசங்களையும் எண் சுவைகளையும், ஆயற் கலைகளையும் அனுமதிப்பது செல்கள். இந்தக் கூட்டமைப்பில் சிக்கல் இல்லாதவரைதான் ஊரை அடித்து உலையில் போடுவதும், ஏறி மிதித்து முன்னேறிச் செல்வதெல்லாம் நிகழும். உடலில் உருவாகும் செல்களுக்கு பிறப்பு, இறப்பு என வளர்ச்சியின் காலகட்டங்கள் இருக்கின்றன. அது தவறும்போது நோய் ஏற்படுகிறது. அதிலும் பல ஆண்டுகளாக மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது புற்றுநோய் (Cancer). புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல. ஆரம்பக்கால நோயை முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்கின்றனர் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள். மாறிவரும் ரசாயன உலகில் புதிது புதிதாக நோய்கள் வரத்தான் செய்கின்றன. அதேநேரத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்வும், அடிப்படைத் தெளிவும், தற்காப்பு அக்கறையும் இல்லாமல் அதிலிருந்து தப்பிக்க முடியாது. குறைந்தபட்சம் கேன்சர் எனப்படும் புற்றுநோய் என்றால் என்ன? என்பதையாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆரோக்கியமான செல், உடல் இயக்கத்துக்கான செம்மையான பணியை முடித்து, பின் இறந்து, அடுத்த செல் வளர வேண்டும். இதுதான் செல்களின் இயல்பான வேலை. அப்படி அல்லாமல், புதிது புதிதாக அதீத வளர்ச்சியில் கட்டுப்பாடற்று செல்கள் உருவாகி பிறகு கட்டிகளாகும். இப்படியாக கட்டுப்பாடில்லாமல் பிரிந்து பிரிந்து வளர்ச்சியடையும் செல்கள் திசுக்கட்டிகளாக ( Lumbs or Masses) மாறுகின்றன. ஒன்று தீமை விளைவிக்காத கட்டி (Benign Tumor) மற்றொன்று புற்றாக மாறக்கூடிய கட்டி (Malignant tumor) உடலில் தோன்றும் எல்லாக் கட்டிகளையும் புற்றுநோயாக கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. ஆனால், பினைன் கட்டிகள், மெலிங்னென்ட்டாக மாற வாய்ப்பிருக்கிறது.
புற்றுநோய்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. உடல் உறுப்புகளில் எந்தெந்த இடங்களில் இவை தோன்றுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல வகைப்படுத்தப்பட்டுள்ளன. கேன்சர் செல்களானது, ஜீரண மண்டலம், ரத்தஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்களில் தீமை செய்யும் ஹார்மோன்களை விடுவித்து உடல் இயக்கத்தில் மாற்றம் செய்துவிடும். புற்றுநோய் செல்கள் இரண்டு வகையில் தனக்கான இடத்தை தக்கவைக்கின்றன. முதலில் இந்த செல்கள் தங்களை பெருக்கிக் கொண்டு ஆக்டோபஸ்போல தன் கொடிய கரங்களால் ரத்தம் மற்றும் நிணநீர் பாதைகளில் உள்ள ஆரோக்கியமான திசுக்களை அழித்துக்கொண்டே அதிவேகமாக உள்ளே பரவும்.
நோய் வருவதற்கான காரணங்கள் :-
நண்பர்களே இன்று நாம் வாழும் முறையே நமக்கு வரக்கூடிய பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
நாம் வாழும் வாழ்வில் மாற்றம் நிகழ்வது அதிசயம் அல்ல , ஆனால் நிகழும் வாழ்வின் மாற்றம் இயற்கையான மாற்றமாக இருந்தால் ,அது ஆரோக்கியமான மாற்றமாக இருக்கும் என்பதில் அந்த வித அச்சமும் இல்லை என்பதில் அந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் நாம் விரும்பி ,தெரிவுசெய்து பயன் படுத்துவதை விட அதிகம் அதிகம் விளம்பர நிறுவனங்கள் காட்சி படுத்தும் அல்லது சந்தை படுத்தும் படுத்தும் பொருட்களையே வாங்கி பயன்படுத்த வேண்டிய கால கட்டாய சூழலில் உள்ளோம் என்பதில் சந்தேகமே இல்லை.
நமக்கு பிடிக்காத ஒரு பொருளை நமக்கு பிடித்த ஒரு திரைப்பட நடிகரோ அல்லது நடிகையோ வந்து நமக்கு தெரிந்த முன்னணி அலைவரிசையில் ( சேனல் ) சந்தைப்படுத்தினால் கொஞ்சமும் தாமதிக்காமல் ,யாரிடமும் எந்த கேள்வியும் கேட்காமல் குடும்பம் முழுமைக்கும் அதன் பக்க விளைவுகளை யோசிக்காமல் பயன்படுத்தி காலம் முழுமைக்கும் நோயில் அகப்படுவதே நாம் வாடிக்கை.
தவிர்ப்பதற்கான வழிமுறைகள் :-
நண்பர்களே மருத்துவம் ஒருபுறம் இருக்கட்டும் முதலில் நாம் செய்ய வேண்டியது எந்த ஒரு பொருளையும் பயன் படுத்த அல்லது அதை வாக்கும் முன்பு யோசிக்க வேண்டியது கட்டாய அனைவரின் உரிமை மற்றும் அவசியம்.
நாம் அனைவரும் அறிந்த நம் தெரு பெண் அல்லது வயதான பாட்டி கீரை விற்க நம் வீட்டிற்கு வரும் பொழுது நாம் அவர்களை எத்தனை கேள்விகள் கேட்கின்றோம்?..
உண்மையில் நாம் யோசிக்க வேண்டிய இடங்களில் யோசிக்காமல் வாங்கி பயன்படுத்தி கொண்டிருக்கின்றோம்.
எடுத்துக்காட்டாக :- நம் ஊரில் விளையும்
வாழைப் பழங்கள்,பப்பாளி,மாம்பழங்கள்,மாதுளை,
சிவப்பு கொய்யா,வேர்க்கடலை..,
பாசிப்பயறு,உளுந்து ,கருப்பட்டி,அசைவ உணவுகளில் நாட்டு கோழிகள்,முட்டையிலும் நாட்டு கோழி முட்டையை அதை முறையாக வளர்க்கும் வீடுகள் இன்று ஏராளம்.அதை தெரிவு செய்து அதை வாங்கி பயன்படுத்தலாம்.
இவ்வாறு ஆரோக்கியமான உணவுகளும்,வாழக்கை முறைகளும் நமக்கு நன்றாக திறந்த புத்தகமாக இருக்க நாமோ கண்ணிற்கு கவர்ச்சியாக காட்சி அளிக்கும் பொருட்களை நாமும் சாப்பிட்டு நம் குழந்தைக்கும் கொடுக்கும் அவலம் இன்று வீடு தோறும் நடக்கும் தினசரி நடவடிக்கை ஆகி கொண்டே போகின்றது.
நண்பர்களே நம் உடலில் இறைவனின் கிருபையால் எல்லா நோய்களையும் விரட்டும் எதிர்ப்பு ஆற்றல் இயற்கையாகவே உள்ளது. ஆனால் நாமோ அதை வளர்ந்து வரும் நாகரிகம் என்ற பெயரில் அதை கொஞ்ச கொஞ்சமாக கொலை செய்து நாளடைவில் நோய் எதிர்ப்பு ஆற்றலை முற்றிலுமாக செயல் படாமல் இருக்க வேண்டிய வேலையை நாமே செய்து விட்டு ,நோய் வந்த பின்பு காரணம் தேடுவது நம் மடமைத்தன்மையை காட்டுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை :-
நாம் பயன்படுத்தும் பற்பொடியில் இருந்து நம் ரசாயன வாழ்க்கை ஆரம்பம் ஆகின்றது. தடுக்கும் வழிமுறைகள் நம் கையில் உள்ளது.
நாமோ " கையில் நெல்லிக்கனி இருக்க அரளி செடியை கையில் எடுத்த நிலையில் உள்ளோம்".
ஆதலால் நாம் முந்தைய தலை முறையினரை எடுத்து பார்த்தால் அவர்களுக்கு வராத நோய்கள் நமக்கு வருவதன் காரணத்தை நாம் உணரலாம்.
நாம் வாழ்வை இயற்கையானதாக ஆக்கி அதன் மூலம் நம் ஆரோக்கியத்தை பெற்று நம் இல் வாழ்க்கையில் நீடித்த ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ ,மாற்றம் என்பது ஆரோக்கியம் கலந்த மாற்றமாக இருக்கட்டும்.அது இனி வரும் தலைமுறையினரை ஆரோக்கியமான தலைமுறையினராக வார்த்தெடுக்க ஒரு ஆணி வேறாக அமையும் என்பதில் துளி சந்தேகமும் கொள்ள தேவை இல்லை.
இனி வரக்கூடிய காலங்கள் ,இது போன்று நோய்களை வைத்து கொண்டாடும் தினமாக இல்லாமல்,நோய் இல்லா ஆரோக்கியமான தினமாக கொண்டாடும் தினமாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பானாக!





Comments
Post a Comment