சீரக சம்பா என்றழைக்கப்படும் மாப்பிளை சம்பா
சிவப்பரிசி என்ற சீரக சம்பா
சிவப்பரிசி என்ற சீரக சம்பா என்று அழைக்கப்படும் இந்த வகை அரிசி கேரளா மக்கள் அதிகமாக பிரியத்துடன் உணவில் அன்றாடம் சேர்த்து கொள்ளும் ஒரு வகையான அரிசியாகும்.
இவ்வகையான நெற்பயிர்கள் காட்டில் இயற்கையாகவே தானாகவே
முளைத்து செழிப்போடு வளரக்கூடிய பயிர்வகை.
இந்தியாவை பொறுத்தமட்டில் கர்நாடகா,பீஹார்,ஒடிசா,மத்தியபிரதேசம்,போன்ற மாநிலங்களில் பயிரிடப்பட்டாலும்,கேரளாவில் இது மிக பிரசித்தம்.
சிறப்புகள் :-
இந்நெல்லின் சிறப்பு என்னவென்றால் பொதுவாக நாம் அரிசியை களைந்து மாட்டுக்கு வைத்துவிட்டு சக்கையை நாம் சாப்பிடுவோம்.
அதுமட்டும் இல்லாமல் இன்று அனைத்து அரிசி வகைகளும் தீட்டப்படுகிறது.
மிக எளிதாக ஜீரணிக்க கூடிய அரிசி:-
சத்துக்கள் :-
அந்த வகையில் இந்த அரிசியை தீட்டினாலும் இதில் உள்ள சத்துக்கள் கொஞ்சம் கூட குறையாமல் நமக்கு கிடைக்கிறது.
ஏன் என்றால் இதில் உள்ள சத்துக்கள் உட்பகுதியில் சேமிக்கப்படுவதால் அரிசி தீட்டப்பட்டாலும் , சத்துக்கள் நமக்கு குறையாமல் கிடைக்கிறது.
மேலும் இந்த அரிசியில் எந்த அரிசியிலும் இல்லாத வகையில் பி 1,பி 3 ,பி 6 ,போன்ற விட்டமின்களும்,எந்த அரிசியிலும் காண முடியாத இரும்புசத்து,மாங்கனீசு,மெக்னீசியம்,செலினியம்,பாஸ்பரஸ்,
போன்ற கனிம சத்துக்களும் மற்றும் நார்சத்துக்களும் அடங்கி இருக்கின்றது.
இதய பாதிப்பில் இருந்து விடுபட :-
இதய பாதிப்பில் இருந்து விடுபட இந்த வகையான இது துணை புரிகிறது.இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இருதய பாதிப்புகள் நெருங்காதவாறு இதயத்தை சீராக பாதுகாக்கிறது.
இதில் மானோகாலின் கே என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது.
இது இன்றைய மருத்துவ துறையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க மருந்தாக "லேவாசு டேட்டின்" என்ற மருந்து பெயரில் கொடுக்கப்படுகிறது.
உணவு பொருட்களாக சிவப்பு அரிசி:-
இவ்வகையான அரிசி புட்டாக,கொழுக்கட்டையாக,கஞ்சாக,பணிகாரங்களாக ,இடியாப்பமாக,குழந்தைகளுக்கு அரிசி மாவாக திரிக்கப்பட்டு இனிப்பு உருண்டைகளாக கொடுக்கப்படுகிறது.
மாப்பிளை சம்பா :-
இந்த வகை அரிசிகள் ஆரம்ப காலங்களில் புதிதாக திருமணம் முடித்து வரும் புது மாப்பிளைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.அதனாலையே இதன் பெயர் மாப்பிளை சம்பா என்ற அடை மொழியிட்டு வழங்கி கவுரப்படுத்தப்பட்டு அழைக்கப்பட்டது.இதில் உள்ள இயற்கையாக அமைய பெற்ற நார்சத்துக்களும் ,விட்டமின்களும் , புதிதாக திருமணம் முடிந்த மணமகனுக்கு முதல் உணவாக கொடுக்கப்பட்டு வந்தது அக்காலத்தில் ஒரு ஆரோக்கிய உணவாக ,ஆதலால் இது மாப்பிளை சம்பா என்றழைக்கப்பட்டது.






Comments
Post a Comment