மைதா உணவா அல்லது விஷமா?
மைதா உணவா அல்லது விஷமா?
மைதா இன்றைய தலைமுறையினரின் விருப்பத்திற்குரிய உணவாக புரோட்டா என்ற உணவின் வடிவில் உலகம் முழுவதும் உள்ள அணைத்து மக்களின் நெஞ்சில் நிரந்தர இடத்தை பிடித்து உள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் வளைகுடா போன்ற நாடுகளிலும் கூட புரோட்டா சாப்பிடுவதை வழக்கமான உணவாக உட்கொள்வதை பழக்கப்படுத்தும் மேம்போக்கான சிந்தனை வளர்ந்து கொண்டு வருகிறது எனலாம்.
கோதுமையின் கடைசி பொருளாக புரோட்டா :-
புரோட்டா கோதுமையின் கடைசி பொருளாக பிரிக்கப்பட்டாலும்,கோதுமையை அதற்குரிய ஆலையில் வைத்து அதில் உள்ள சத்துக்களான காப்பர்,பைபர்,இரும்பு,நார்ச்சத்துக்கள் அனைத்தும் சல்லடை போட்டு பிரித்து பிறகு கடைசியாக இந்த மைதா என்ற மஞ்சள் நிற மாவு வெளி வருகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் நாம் இன்று காணும் மைதா போன்று உண்மையான மைதாவில் நிறம் வெள்ளை அல்ல அது மஞ்சள் நிறமே அதன் உண்மையான நிறம்.
விஷமாக மாற்றப்படும் மைதா:-
வணிகர்கள் தங்கள் வியாபார யுக்தியை பயன்படுத்தும் விதமாக இந்த மைதாவை உணவகத்தில் பயன்படுத்தும் பொழுது அதில் பென்சாயில் பெராக்ஸைடு போன்ற ரசாயன விஷத்தை கலந்து புரோட்டா போன்ற உணவை தயாரிக்கும் பொழுது அது மிகவும் மென்மையான முறையில் ,உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
மரணத்தை வரவழைக்கும் பென்சாயில் பெராக்ஸைடு:-
இந்த ரசாயன மருந்து ஆய்வகத்தில் எலி,முயல்,தவளை,போன்ற உயிரினங்களின் உடம்பில் இதை செலுத்தி உடம்பில் உள்ள கணையத்தை செயல் இழக்க செய்து, தங்கள் பரிசோதனைக்கு உட்படுத்த இந்தவகையான மருந்துகளை பயன்படுத்துவர்.
மேலும் இவ்வகையான மருந்து தலை முடியை கறுப்பாக்கும் நிறமிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகையான நிறமிகளை பயன்படுத்தும் மனிதர்கள் நோயாளிகளாக மாறுவர் என்பதில் எந்த வகையான சந்தேகமும் இல்லை.
இந்த வகையான ரசாயனத்தை புரோட்டா போன்ற உணவில் சேர்க்கும் பொழுது இதை உட்கொள்ளும் மனிதர்களின் உறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கணையம்,உணவுக்குழாய்,நுரையீரல்,
சிறுநீரகம்,இதயம்,போன்ற உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து கடைசியில் மரணம் நிகழும்.
கிராமத்து பழமொழியான "கடப்பாரையை தின்று கஷாயம் குடித்த கதையாக" விஷம் கலந்த உணவை உண்டு அதில் பக்க விளைவுகள் உள்ளதே என்று வருத்தப்படுவதில் எந்த வித பயனும் இல்லை.
மாற்றம் ஒன்றே நிரந்தரம் :-
மாற்றம் நம்மில் இருந்து தொடங்கவேண்டும்.எத்தனையோ கட்டுரைகளையும்,செய்திகளையும்,படித்த பின்னும் மறுபடியும் அதை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள் மக்கள் நிலைமையில் இருந்து மாக்கள் என்ற விலங்கு நிலைமைக்கு தள்ளப்பட்ட நிலைமைக்கு ஒத்து போக கூடிய நிலைமையில் உள்ளனர்.
உணவே மருந்து,அதுவே உணவு.
மாற்றம் ஆரோக்கியமான மாற்றமாக இருந்தால் அனைவருக்கும் நலம் பயக்கும்.







Comments
Post a Comment