பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்! இயற்கைக்கு மேலும் வளம் சேர்ப்போம்!!!

தமிழில் நெகிழி என்றும்,ஆங்கிலத்தில் பிளாஸ்டிக் என்று கூறப்படும் இந்த பொருள் சின்ன குழந்தைக்கு கூட பரிச்சயம்,அந்த அளவுக்கு நம் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி போய்விட்டது என்றால் மிகை ஆகாது.
சுற்றுப்புற சூழலில் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம்:-
இன்று சுற்றுப்புற சூழல் பெரும்பாலான வகையில் மாசற்று இருக்கிறது.அதில் பெரும் இடத்தை தக்க வைத்து கொண்டது இந்த பிளாஸ்டிக்.தேநீர் அருந்தும் குவளையில் இருந்து,உணவகத்தில் சாப்பாடு பொறியவும்,சாப்பாடுக்குரிய குழம்பு வகைகளை மடக்கவும் ,தண்ணீர் அருந்தும் அனைவரின் கையிலும் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களே இருக்கிறது.
வன விலங்கினங்களின் அழிவில் பிளாஸ்டிக்கின் பங்கு :-
இன்று நாம் சரியான முறையில் சாப்பிடாமல் போடும் சில உணவு பொருட்கள் பாலீதீன் என்ற பிளாஸ்டிக் பைகளோடு சாலைகளிலும்,மிருக காட்சி சாலைகளிலும்,போடுவதால் மாடு,ஆடு ,நாய்,போன்ற ஐய்ந்தறிவு படைத்த விலங்கினங்கள் பசியின் காரணத்தால் அந்த நாம் போடும் உணவு பொட்டலங்களை உண்ணும் பல நேரங்களில் அந்த பிளாஸ்டிக் பைகள் ,ஆடு,மாடு போன்ற விலங்கினங்கள் உணவோடு அந்த பிளாஸ்டிக் பைகளும் சேர்த்து வயிற்றுக்குள் சென்று மூச்சுக்கற்றைகள் மற்றும் உணவு பாதைகளில் அடைத்து உயிரை விடும் அபாயங்கள் நித்தமும் ஒரு கதையாக நடக்கும் அவலம் இந்த பிளாஸ்டிக் என்ற கொடிய அரக்கனால் நடந்துகொண்டிருக்கிறது.
கடலில் கப்பலில் சுற்றுலா செல்லும் நபர்கள் கடலில் வீசும் தண்ணீர் பாட்டல்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும்,அதை எடுக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டாலும் அதை எடுக்கும் பணி இன்னும் தொடரும் அவலமாக நடப்பது,ஐய்ந்தறிவு உண்மையில் விலங்குக்குதானா என்ற சிந்தனைக்கு நம்மை கொண்டு செல்ல தூண்டுகிறது.
மண்ணில் மக்காத பிளாஸ்டிக் :-
மண்ணில் மக்காத இந்த பிளாஸ்டிக்கில் அதிகப்படியாக மறு சுழற்சிக்கு எடுத்து கொள்ளப்படும் பிளாஸ்டிக்கின் அளவு வெறும் 7 சதவீதமே என்பது அடுத்த அதிர்ச்சிகலந்த தகவல்.
இந்த பிளாஸ்டிக் மண்ணில் மக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு 100 - 1000 ஆண்டுகள் என கூறப்படுகிறது.பருத்தி மற்றும் இலவன்பஞ்சாலான
பொருட்கள் எடுத்துக்கொள்ளும் கால அளவு 1 - 4 மாதங்கள்,டயப்பர் மற்றும் நாப்கின்கள் என்று சொல்லப்படும் பிளாஸ்டிக்காலான பொருட்கள் மக்க எடுக்கும் கால அளவு 500 - 800 ஆண்டுகள் ,உள்ளன சாக்ஸ் 1 - 5 ஆண்டுகள் ,தோல் காலணிகள் - 25 - 40 ஆண்டுகள் எனவும் கணிக்கபட்டிருக்கிறது.
புற்றுநோயில் பிளாஸ்டிக் :
இன்று மருத்துவ துறைக்கு சவால் விடும் அளவுக்கு மக்களின் உயிரை அச்சுறுத்தும் நோய்களின் அரக்கன் புற்றுநோய்க்கு வித்திடும் ஆணிவேராக பிளாஸ்டிக் உள்ளது.பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்துவது எமனை நாமே அழைப்பதற்கு சமம்,
நாம் சூடாக உள்ள உணவு பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் ஊற்றும் பொது அதில் உள்ள வினை தரும் செயற்கை நிறமிகள் வேதிவினை புரிந்து உணவோடு கலந்து நம் உணவை விஷமாக மாற்றகூடிய நிகழ்வு அன்றாடம் ஏராளம்.
மண்வளத்தை பாதிக்கும் பிளாஸ்டிக் :-
மழைநீரை ஆதாரமாக கொண்டு செயல்படும் நிலங்களின் அடியில் செல்ல முடியாதவாறு இந்த மக்க பிளாஸ்டிக் பைகள் மழைநீரை சென்றடைய வண்ணம் தடுக்கும் செயலில் ஈடுபட்டு மண்வளத்தை கெடுக்கிறது.
சுத்தமான இயற்கை சூழல் ஆரோக்கியமாக வாழ ஒவ்வருவரும் வாழ பழகவேண்டும்,அதற்கு மாற்றம் ஒவ்வ்ருவரிடமும் தொடங்க வேண்டும்.மாற்றமே நிலையானது!அது ஆரோக்கியமான மாற்றமாக இருக்கும் பட்சத்தில் அதுவே சிறந்தது!!
தமிழில் நெகிழி என்றும்,ஆங்கிலத்தில் பிளாஸ்டிக் என்று கூறப்படும் இந்த பொருள் சின்ன குழந்தைக்கு கூட பரிச்சயம்,அந்த அளவுக்கு நம் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி போய்விட்டது என்றால் மிகை ஆகாது. சுற்றுப்புற சூழலில் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம்:-

Comments
Post a Comment