கண்களே உங்களுக்கு மரியாதை செய்கின்றோம்!!

கண்களே உங்களுக்கு மரியாதை செய்கின்றோம்!!

கண்கள் :-
நமக்கு இறைவனால் இந்த உலகத்தை காண கொடுக்கப்பட்ட விலை நிர்ணயம் செய்யமுடியாத ஒரு உறுப்பாக , இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வரு  மனிதனுக்கும் உடலில் இயற்கையாக அமைய பெற்ற ஒரு உறுப்பாக கண் அமையப்பெற்றுள்ளது.

இருப்பினும் சில மனிதர்களுக்கு அழகான கண்கள் அமையப்பெற்றும் அதில் பார்க்க கூடிய வகையில் உள்ள ஒளி இல்லாத காரணத்தால் அவர்கள் பார்வை இழந்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

கண்கள் இல்லாதவர்களிடம் போய் கேட்டு பார்த்தால் தெரிய வரும் கண்களின் அருமை.

கண்களை பாதுகாப்போம் :-
                                     
கண்கள் , நாம் இன்று எவ்வுளவு அதிகமாக விலை கொடுத்து கைபேசி வாங்கினாலும் அதில் நாம் எதிர் பார்ப்பது அந்த கைபேசியின் கேமரா மெகாபிக்ஸல் என்று சொல்லப்படும் துல்லியமான ,தெளிவான படங்கள் அதனால் எடுத்து தரப்படுகின்றதா என்ற ஒரு தெரிவு.

அதை போன்று நம் கண்களை எத்தனை மெகாபிக்சலிடம் நீங்கள் ஒப்பிட்டு பார்த்தாலும் நம் கண்களின் மெகாபிக்சலின் தரமான,துல்லியமான,ஒரு நொடி பொழுதில் அது எடுக்கும் பிம்பங்களின் அளவுக்கு எந்த கைபேசி மெகாபிக்சலும் போட்டி போடா முடியாது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

கண்களை பாதுகாப்பது எப்படி :-
                                                       

நண்பர்களே நாம் இன்று கோடையை சந்திக்க தயாராகிவருகிற இந்த வேலையில் ,கோடை வெப்பத்தில் நாம் அலைய வேண்டிய சூழலில் நம் வாழக்கை அமைய பெற்ற காரணத்தால் வெயிலில் செல்லும் நபர்கள் சன் கிளாஸ் மற்றும் ஆட்டோ கூல் போன்ற தரமுள்ள கண்ணாடிகளை அதற்குரிய விற்பனையாளர்களிடம் சென்று பரிசோதித்து வாங்கி அணிந்து செல்லும்போது நம்கண்ணுக்குள் வருகிற தூசு,வாகன புகை,சூரிய வெளிச்சம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கலாம்.

உணவுகள் :-
                                   
கண்களை பாதுகாக்கும் உணவுகள் பல உள்ளன.அதில் அனைவராலும் அறிய பெற்று விலை மிக குறைந்த உணவான கீரை.

இதை அதிகமாக இல்லாவிட்டாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடும் வழக்கம் நம் கண்ணிற்கு தக்க வலிமையை தரும்.
             
பப்பாளி சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.                                     
கேரட்டில் உள்ள பீட்டா கேரட்டின் என்ற வைட்டமின் கண்ணிற்கு தேவையான பார்வை கூர்மையை தருவதோடு ,நம் ரத்தத்தையும் சுத்தம் செய்து சுத்திகரிக்கும் வேலையை செவ்வனே செய்கிறது.
                                                       
   
கேரட்டை தவறாமல் உணவில் பொறியலாகவோ,ஜூஸாகவோ சேர்த்து வருவது கண்களுக்கு நாம் செய்யும் நீண்ட நாள் உபகாரம்.
                                           
அடுத்த படியாக மீன்.இதில் ஒமேகா என்ற நல்ல கொழுப்பு உள்ளது.இது நம் கண்ணில் காணப்படும் அந்த நீர் போன்ற திரவத்தை வற்றாமல் பாதுகாத்து ,நம் கண்கள் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் திரைப்படம் பார்க்கும் நண்பர்களின் கண்களை வறட்சி நிலைக்கு செல்லாமல் பாதுகாக்கும் பணியை செய்கிறது.
ஆதலால் மீன் கண்களின் நண்பன் என்றே சொல்லலாம்.

கண்களின் எதிரிகள் :
                                   
இரவு பொழுதில் நீண்ட நேரம் வேலை செய்யும் நண்பர்கள் அதிக பட்சம் நீண்ட பொழுது வேலை செய்து கண்களுக்கு ஓய்வு இன்றி வேலை கொடுக்கும் பொழுது கண்கள் சோர்வடைகின்றன.

மேலும் கண்கள் தொடர்ச்சியாக கண்கள் சிமிட்டாமல் பார்க்கும் பொழுது கண்கள் அழுத்தம் கொடுக்கப்பட்டு ,கண்களின் விழிவெண்படலம் நீர் வற்றும் நிலைமைக்கு தள்ளப்படுகிறது.இதனாலேயே கண்களில் அரிப்பு ,சிவப்பாகமாறுவது ,நீர் வடிதல் ,தடித்தல் போன்ற பிரச்சனைகள்.
                               
அதிகபட்சம் கண்களை ஒவ்வரு அரை மணி நேர இடைவேளையில் கண்களை சில நிமிடங்கள் சிமிட்டுங்கள் ,உங்கள் நீண்ட நேர வேலை பளுவின் இடை வேளையில் சில நிமிடங்கள் உங்கள் கண்களுக்காக ஒதுக்கி பச்சையாக தோன்றும் இயற்கையை பார்த்து கண்களுக்கு குளிர்ச்சி அடையச்செய்யுங்கள் .கண்களை இருக்கமாக மூடி மூடி சில தடவைகள் பயிற்சி செய்து கண்களை மசாஜ் செய்யுங்கள். 

முக்கியமாக கண்களில் தூசி அல்லது வேறு ஏதவது விழுந்தது போன்ற உணர்வோ ஏற்பட்டால் கண்களை மூடிய நிலையில் ,குளிர்ந்த நீரில் ஒரு பருத்தி துணியையோ அல்லது ஒரு தளர்வான மெல்லிய துணியை அந்த குளிர்ந்த நீரில் நனைத்து அதை கண்களின் மேல் வைத்தாலே போதுமானது.

கண்களுக்கு பயிற்சி :-
                                             
கண்களை ஒவ்வரு நாளும் தவறாமல் கண் பயிற்சி கொடுக்க மறவாதீர்கள்! கண்களை சில நிமிடங்கள் இடமிருந்து வலமாக ஒரு 5 தடவையும் ,வலமிருந்து இடமாக 5 தடவையும்,பின்பு மேலிருந்து கீழாகவும் ,கீழிருந்து மேலாகவும் 5 தடவையும் செய்ய கண்களுக்கு இது நல்ல பார்வைத்திறன் மேம்பட சரியான பயிற்சியாகும்.நீங்கள் செய்யும் இடமிருந்து வலமாக செய்த பின்னர் 2 நிமிட இடைவேளை ,இவ்வாறு ஒவ்வரு அடுத்த கட்ட கண்களை சுழல விடும் முன்பும் 2 நிமிட இடை வேலை கொடுத்து,இறுதியாக அனைத்தும் முடித்த பின்பு 2 நிமிட இடைவேளை கொடுத்து பின்பு கண்களை திறப்பதற்கு முன்பு நம் இருகைகளையும் நன்றாக தேய்த்து கைகளின் அடிப்பாகத்தை மெதுவாக மூடிய கண்களின் மேல் பாகத்தில் வைத்து நம் கண்களை நம் இரு உள்ளங்கைகளையும் பார்த்த வண்ணம் மெதுவாக திறந்து பாருங்கள்.இந்த பயிற்சி கவிஞ்சர் ,மற்றும் நம் தேசிய கீதத்தை இயற்றியவருமான ரவீந்திரனார் தாகூர்
அவர்களின் வாழ்க்கை வரலாறில் அவர்கள் அனுபவ பூர்வமாக உணர்ந்து,தன்னுடைய 90 ஆவது வயது வரை கண்ணாடி அணியாமல் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திட்ட கலை இதுதான்.  

ஆதலால் கண்களே உங்களுக்கு  மரியாதையை செய்கின்றோம்!!!! 
  
            

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)