பனையை பாதுகாப்போம்!நம் தேசிய அடையாள சின்னத்தை நினைவு கூறுவோம்!!

பனையை பாதுகாப்போம்!நம் தேசிய அடையாள சின்னத்தை நினைவு கூறுவோம்!!


பனை மரத்தின் பயன்கள் :-

பனை மரம் இது "கற்பக தரு" மற்றும் "பூலோக விருட்சம்" என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு.

ஏன் எனில் பனை மரம் கீழ் பாகத்திலிருந்து மேல் பக்கம் வரை அனைத்துமே மருத்துவ மற்றும் மக்களுக்கு நன்மை தருவது மட்டும் இல்லாமல், பல வியாபார வாய்ப்புகளையும் அள்ளி தருவது பனை மரத்தின் சிறப்பு.

பனைமரத்தின் பயன்கள் :-

பனைமரத்தில் பனம் பழம் மற்றும் நுங்கு ,பனங்கிழங்கு போன்ற வைட்டமின் மற்றும் நார்சத்து நிறைந்த மக்களுக்கு என்றும் நன்மை தரக்கூடிய உணவு பொருட்களே அதிகம்.
                                       
மேலும் இப் பனைமரத்தில் பனை கீற்றை சீவி விட்டு அதன் மூலம் பதநீர் என்னும் பதமான நீர் போன்ற திரவ உணவும் கிடைக்கிறது.

பதநீர்:-
இது அனைத்து மக்களும் அருந்தும் வகையில் மிகவும் அழகாக ,வெள்ளை நிறத்தில் ,குளிர்ந்த முறையில் இயற்கையாக கிடைப்பது இதன் தனி சிறப்பு.

இதை அருந்தும் மக்களுக்கு இது தரும் ஆரோக்கியம் என்ன வென்றால் கல் அடைப்பு பிரச்சனையில் இருந்து விடுபட வாய்ப்பு அளிக்கிறது.

மேலும் இதில் அதிகமாக கால்சியம் உள்ளதால் எலும்புகள்  சம்பந்தப்பட்ட எந்த வித நோயும் வரும் வாய்ப்பு மிக குறைவு.

இதை தொடர்ந்து அருந்தும் மக்கள் உடல் உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு இயற்கையாக உடம்பு குளிர்ச்சி அடைய இது ஏதுவாகிறது.

இதில் சுண்ணாம்பு கலப்பதால் இதன் மூலம் நம் உடம்புக்கு சுண்ணாம்பு சத்தும் கிடைக்க பெறுகிறது.

இதில் சுண்ணாம்பு கலக்காத பதநீர் , கள் என்ற இயற்கையான மது பானமாக மற்றும் இது மக்கள் உடம்புக்கு எந்த வித தீங்கும் தராத உற்சாக பானமாக இன்று வரை மக்கள் தொடர்ந்து அருந்தி வருவதுமட்டும் இல்லாமல் அரசாங்கத்திடம் முறையாக இதற்கு உரிமம் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

கருப்பட்டி :

இந்த பதநீரை தக்க பதத்துடன் காய்ச்சி எடுத்து அதற்கு தகுந்தாற் போல் உள்ள சிரட்டையில் ஊத்துவதன் மூலம் அதன் அளவு குறிக்கப்படுகிறது.

காய்ச்சி முடிக்கப்பட்ட இந்த பதநீர், கருப்பட்டி என்ற பெயரில் கருப்பு மற்றும் பழுப்பு வண்ணத்தில் அரை வட்ட வடிவத்தில் கிடைக்க பெறுகிறது.

இதை டீ போல் பருகுவதன் மூலம் பல அளப்பரிய மருத்துவ குணங்கள் இதில் அடங்கி உள்ளது.இதில் இயற்கையான சர்க்கரை உள்ளதால் இது நம்முடைய ரத்தத்தில் கலந்து உள்ள ரசாயன உணவுகளை உட்கொண்டு அதன் மூலம் நம்முடைய ரத்தத்தை மாசடைந்த ரத்தத்தை சுத்திகரித்து சுத்த ரத்தத்தமாக மாற்றுவதிலும் , இதை அருந்துவது மூலம் ரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இது திறம்பட செயல்படுகிறது.

இன்று இந்த வித கருப்பட்டிக்கு உலகம் அனைத்துக்கும் ஏற்றுமதி செய்ய
படுகிறது என்பது கூடுதல் தகவல்.

பனங்கிழங்கு:-
          


இதில் அதிகப்படியாக நார்சத்து உள்ளதால் ,இதை உண்போர்கள் மலசிக்கல் இன்றி வாழ இது துணை புரிகிறது.

பனைமரம் :-

இதில் இருந்து வளரும் பனை கீற்றுகள் பனை விசிறீகளாக ,பனை ஓலைகளாக,வேயப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

மேலும் இதில் இருந்து பெறப்படும் நார்கள், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது .இன்னும் அழகுசாதன பொருட்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட பாய்கள் மக்களின் பயன்பாட்டில் உள்ளது .

பனை மரத்தின் கட்டைகள் சாலைகள் போடவும்,வீட்டின் கூரையாகவும்,ஜன்னல்கள் ஆகவும்,கதவுகளாகவும் இன்னும் இவ்வாறு நுனி துகள்கள் அனைத்தும் அடுப்பெரிக்க ,செங்கல் சூளைகளில் சுட்டு எரித்து அதை சுட்ட செங்கற்களாக மாற்றுவதிலும் பனை மரத்தின் பயன் பாடுகள் நீண்டுகொண்டே போகிறது.

நமது மாநிலத்தின் தேசிய மரமாக இருப்பதில் பனை மரத்தின் பங்கை அறிந்தால் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போவோம் என்பதில் துளியும்  சந்தேகம் இல்லை.

நன்மைகளையும்,பல எண்ணிலடங்கா மருத்துவ குணங்களையும் ,மக்களுக்கு ஒரு நல்ல வியாபார தோழனாக பணத்தை உள்ளூர் மற்றும் வெளி நாடுகளின் சந்தையிலும் மதிப்பை தேடி தரும் பனையை போற்றுவோம் ,பாதுகாப்போம்!!

                            

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)