கோடையை குளிர்விப்பது எப்படி???.

 கோடையை குளிர்விப்பது எப்படி???.



கோடை வந்தாச்சு.இன்னும் சில நாட்கள்ல அதிகமான கோடையை பார்ப்போம்.   
வரக்கூடிய இந்த கோடையை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்வது எப்படினு இந்த வார நம்ம இயற்கை மருத்துவ தலைப்பிலே நம்ம பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள் :
                                       

கோடை வெயில் அப்படீன்னு சொல்லிட்டாலே நமக்கெல்லாம் உடனே நியாபத்துக்கு வருவது கோகோலா,பெப்சி,ஸ்பிரிட்,போன்ற குளிரூட்டப்பட்ட  குளிர்பானங்கள்தான்.

இதனால நமக்கு எந்த பயன்பாடுகளும் கிடையாதுங்கிறத மொதல்ல மனசுல பதிய வச்சுக்கோங்க.

அடுத்த படியா நாம குடிக்கிற இந்த குளிர்பானதால நம்ம தாகத்தை தணிக்கவும் முடியாது.

அப்புறம் ஏன் குடிக்கிறோம்ன்னு பார்த்தா குளிரூட்டப்பட்ட பானம் பொதுவா நாம வெயில்ல போயிட்டு வந்து குடிக்கும் போது ஒரு வகையான ருசியாவாகவும்,குளிர்ச்சியால நாக்குக்கு தாகத்தை தணிக்கிற மாதிரி ஒரு மாய வித்தையை காண்பித்து ,மேலும் இந்த செயற்கை நிறமிகளால் நிரப்பப்பட்ட செயற்கை குளிர்பானங்கள் நம்ம உடம்புல தேவையற்ற நோய்களையும் நாம உண்டாக்குறதுக்கு வழி வகுக்கிறோம் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.

எவ்வாறு கோடையை குளிர்விப்பது:-

கோடை கால ஆடைகள்:-     
இந்த கோடையை ஆரோக்கியமான முறையில எதிர்கொள்வது எப்படீனா இனி நாம பருத்தி ஆடைகளை (காட்டன் டிரஸ் ) அணிவது ஆண்களும்,பெண்களும்.ஆண்கள் ஜீன்ஸ் உடைகளை மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது.

இதனால் உங்களுக்கு இந்த கோடையினால் வரும் வேனல் கட்டிகள் போன்றவற்றில் இருந்து விடு படலாம்.

கோடைகால பானங்கள் :

இந்த கோடையில நாம மொதல்ல செய்ய வேண்டியது அதிக நீர் பருகனும்.முடிஞ்சா அதிகாலையில நாம வழக்கமா குடிச்சுட்டு வர்ற டீ,காபி,விடுத்து இளநீர் ,பதநீர் போன்ற இயற்கையான பானங்களை அதிக அளவில் பருகலாம்.
                                       
மேலும் மதிய உணவில் கோடைகாலம் முடியும்வரை மசாலா சாப்பாடுகளை கொஞ்சம் குறைத்து,அதற்கு பதிலாக மதிய உணவுக்கு தயிர்,மோர், சாப்பாடு உணவாக தேர்வு செய்யலாம்.   
மேலும் அதிகமாக ஆரஞ்சு,சாத்துக்குடி,எலுமிச்சை போன்ற சிட்ரிக் அதிகமுள்ள பழ வகைகளை தேர்வுசெய்து தேவைக்கு எடுத்துக்கொண்டு நம் தாகத்தை இயற்கையான முறையில் தணிக்கலாம்.

இவ்வகையான பலன்கள் அணைத்து தரப்பினரும் வாங்கி உபோயோகப்படுத்தும் விதமாக குறைந்த விலையில் அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது.

மேலும் கரும்புசார் ,நுங்கு போன்ற பானங்களும் குறைந்த விலையில் நாம் வாங்கி பயன்படுத்தும் விலையில் உள்ளதால் ,இதையும் நாம் வாங்கி தேவைக்கேற்ப பருகலாம்.

இதை பருகுவதன் மூலம் முக்கியமாக கரும்பு சாறில் சுக்ரோஸ்,குளுகோஸ்,போன்ற சத்துக்கள் நாம் வெயிலில் இழந்த எனர்ஜியை பெற்றுத்தரக்கூடிய பானங்கள்.

தர்பூசணி ,கிர்ணி போன்ற பழங்களும் இந்த கோடையில் அதிக அளவில் கிடைப்பதால் அதை வாங்கி நாம் பானங்களாகவோ அல்லது நேரடியாக பழத்தை மென்று தின்பதும் முழு பலனையும் பெற்று தரும்.
                                   
இதில் தர்பூசணி பலன்கள் அனைத்தும் நீர் சத்து உள்ளவை.இதை நாம் உட்கொள்வதன் மூலம் இழந்த நீர் சத்தை பெற முடியும்.தர்பூசணியில் 95 சதவீதம் நீர் சத்து உள்ளது.அனைத்து தரப்பினரும் வயது வித்தியாசமின்றி சாப்பிடலாம்.

கோடையில் இருமுறை குளிப்பது :- 
இந்த கோடையில் அதிகாலையில் குளிப்பது நலம்.ஏன் என்றால் அதிகாலையில் தண்ணீர் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக இருப்பதால் அதிகாலையில் குளிப்பது நலம் பயக்கும்.

மேலும் வெளி வேலையாக வெயிலில் அதிகம் செல்லக்கூடிய விற்பனை பிரதிநிதிகள்,வீடுவீடாக சென்று உணவு விற்கும் விற்பனையாளர்கள்,அலுவலக வேலையாளர்கள் அனைத்து தரப்பினரும் வீட்டிற்கு வந்த உடன் வியர்வை தளர்த்தி,பின்பு ஒருமுறை குளிர்ப்பது நம் உடம்பிலுள்ள வெப்பத்தை தணித்து,இரவில் நன்றாக தூக்கத்தை கொடுக்கும்.
                                       

இந்த கோடையை எவ்வாறு இயற்கை முறையில் குளிர்விப்பது என்பதை பார்த்தோம்.

ஆரோக்கியமான முறையில் இயற்கையான உணவுகளை மற்றும் உடைகளை ,பழக்கங்களை பின்பற்றி இந்த கோடையில் குளிர்ந்திருங்கள்.

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)