தாய்ப்பாலுக்கு ஈடான தேங்காய்ப்பால்!!
தாய்ப்பாலுக்கு ஈடான தேங்காய்ப்பால்!!!
தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களாகும். அதில் ஒன்றுதான் தேங்காய். தேங்காய் துருவலை பிழிந்தால் கிடைப்பது தேங்காய்ப்பால்.
தேங்காய்ப்பாலின் மருத்துவ குணங்கள் :-
தேங்காய் பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால் இது நம் உடலில் உள்ள எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நமக்கு வரும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பது முதல் இடம் வகிக்கின்றது.
மேலும் தலைமுடி இழப்பு மேலும் பொடுகுத் தொல்லை முடி கருப்பாக மாற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக தேங்காய்ப்பாலைப் பிழிந்து தலையில் தடவி வர நாளடைவில் நாம் இழந்த முடியை திரும்ப பெற வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றது.
அல்சர்:-
தேங்காய் பாலை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு வாய்ப்புண் , வயிற்றுப்புண் அனைத்தும் நலம் பெற தேங்காய்ப்பால் வழிவகுக்கின்றது. ஏனெனில் தேங்காய் பாலில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் வயிற்றில் உள்ள மலக்குடல் களை சுத்தப்படுத்தி ஜீரணமண்டலத்தை செயல்படுத்துவதிலும் தேங்காய்ப்பால் சிறந்து விளங்குகின்றது.



Comments
Post a Comment